டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட அமித் ஷாவா இது.. ரொம்ப சிம்பிளாக ரசிகர்களோடு ரசிகராக மோடி ஸ்டேடியத்தில்! தீயாக பரவும் படம்

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான போட்டோ ஒன்று இணையத்தில் டிரெண்ங்கில் உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கியது. வழக்கமாக 8 அணிகள் மட்டுமே ஐபிஎல் தொடரில் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு புதிதாக இரு அணிகளைச் சேர்த்து மொத்தம் 10 அணிகள் களமிறங்கின.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அனைத்து லீக் போட்டிகளும் மகாராஷ்டிராவிலேயே நடத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு டூ டெல்லி! மூத்த புள்ளியை தட்டி தூக்கிய அமித் ஷா.. அதுவும் தன்னோட டீமிற்கே! அப்போ அதுதானா? தமிழ்நாடு டூ டெல்லி! மூத்த புள்ளியை தட்டி தூக்கிய அமித் ஷா.. அதுவும் தன்னோட டீமிற்கே! அப்போ அதுதானா?

 இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றனர். இதில் லீக் சுற்றில் குஜராத் 10 போட்டிகளிலும் ராஜஸ்தான் 9 போட்டிகளில் வென்று இருந்தன. லீக் தொடரில் முதல் இடம் பிடித்த குஜராத் அணி குவாலிபயர் 1இல் வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு வந்தது. லீக் சுற்றில் இரண்டாவது இடம் பிடித்த ராஜஸ்தான், குவாலிபயர் 1 தோற்ற போதிலும், இரண்டாவது குவாலிபயரில் வென்று இறுதிப் போட்டிக்கு வந்தது.

 நரேந்திர மோடி மைதானம் ஒருபுறம் அறிமுக தொடரிலேயே இறுதிப்போட்டிக்கு வந்த குஜராத் அணி, மற்றொரு புறம் 14 ஆண்டுகள் கழித்துக் கோப்பை வெல்லக் காத்திருக்கும் ராஜஸ்தான் அணி மோதுவதால் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இதுவரை இல்லாத அளவாக சுமார் 1.20 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நரேந்திர மோடி மைதானம் ஒருபுறம் அறிமுக தொடரிலேயே இறுதிப்போட்டிக்கு வந்த குஜராத் அணி, மற்றொரு புறம் 14 ஆண்டுகள் கழித்துக் கோப்பை வெல்லக் காத்திருக்கும் ராஜஸ்தான் அணி மோதுவதால் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இதுவரை இல்லாத அளவாக சுமார் 1.20 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருபுறம் அறிமுக தொடரிலேயே இறுதிப்போட்டிக்கு வந்த குஜராத் அணி, மற்றொரு புறம் 14 ஆண்டுகள் கழித்துக் கோப்பை வெல்லக் காத்திருக்கும் ராஜஸ்தான் அணி மோதுவதால் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இதுவரை இல்லாத அளவாக சுமார் 1.20 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 கோலாகலம்

கோலாகலம்

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறைவு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இப்போது கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில், நிறைவு நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் டாஸில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

 அமித் ஷா

அமித் ஷா

போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஸ்டேடியத்தில் இருந்த மக்களின் ரிஆக்ஷனை டிவியில் காட்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஒளிப்பதிவாளர் கேமாரவை ஒரு பக்கம் திருப்பிய போது, அனைவருக்கும் ஒருவித இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, அவரது மனைவியுடன் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். எவ்வித சிறப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் ரசிகர்கள் உடன் ரசிகராகவே அவர் அமர்ந்து போட்டியை ரசித்தார்.

 வேறு இடம்

வேறு இடம்

அமித் ஷாவின் மகனும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா வேறு ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தார். பிசிசிஐ தலைவர் கங்குலி உள்ளிட்ட பிசிசிஐ தலைவர்கள் வேறு இடத்தில் அமர்ந்து இருந்தனர். பிசிசிஐ தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் ஜெய் ஷா அமர்ந்து இருந்தார். ஆனால், மத்திய அமைச்சர் அமித் ஷா இங்குச் செல்லாமல் ரசிகர்களுடன் இணைந்து போட்டியை ரசித்தார்.

பாஜகவினர்

பாஜகவினர்

போலீஸ் கெடுபிடிகள், சிறப்பு இடம் என எதுவும் இல்லாமல் போட்டியை அமித் ஷா காண்பது பாஜகவினர் எளிமையை உணர்த்துவதாக இணையத்தில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் அமித் ஷா எளிதாக அவரது மகன் ஜெய் ஷா உடன் சிறப்பு இருக்கை பகுதியில் அமர்ந்து இருக்க முடியும் என்றும் இருப்பினும் அது பிசிசிஐ தலைவர்களுக்கான இடம் என்பதால் அவர் அங்கு செல்லவில்லை என்றும் பாஜகவினர் கருத்து கூறி வருகின்றனர்.

 டிரெண்டிங்

டிரெண்டிங்

மத்திய அமைச்சர் அவரது மனைவியும் ரசிகர்கள் உடன் ரசிகராக அமர்ந்து போட்டியைக் காணும் போட்டோவும் இணையத்தில் டிரெண்ங்கில் உள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே முதலில் பேட்டிங் செய்யும் ராஜஸ்தான் அணி தடுமாற்றத்துடனேயே ஆடி வருகிறது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த அந்த அணி, 20 ஓவர்களில் 130 ரண்களை மட்டுமே எடுத்துள்ளது.

English summary
Home minister Amith shah watching IPL 2022 finals in stadium without special protection: Amith shah in Modi stadium to watch IPL finals 2022.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X