IRCTC: டிக்கெட் புக்கிங்.. யுபிஐ-யில் பேமெண்ட் செய்தால் கூடுதல் கட்டணமா? ரயில்வே அமைச்சர் கொடுத்த பதில்
டெல்லி: ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐகளை பயன்படுத்தி பரிவர்த்தனை மேற்கொண்டால் கூடுதலாக ரூ.10 கட்டணம் பிடித்துக்கொள்வது பற்றி ராஜ்யசபாவில் எம்பி சஞ்சய் சிங் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறிய பதிலின் விவரங்களை பார்க்கலாம்.
ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. கவுண்ட்டரில் கால் கடுக்க நின்று டிக்கெட் புக் செய்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

ஏன் கூடுதல் கட்டணம் வசூல்?
வீட்டில் இருந்தபடியே, செல்போன் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி வந்துவிட்டதால் பயணிகள் பலரும் தற்பொது ஐஆர்சிடிசி செயலி வழியாகவே டிக்கெட்டை முன்பதிவு செய்கிறார்கள். அதிலும் யுபிஐ வழியாக டிக்கெட் முன்பதிவுக்கு பேமெண்ட் செலுத்தும் வசதி வந்த பிறகு, பணம் செலுத்துவது எளிதான நடைமுறையாக இருப்பதால் பயணிகள் பலரும் இந்த முறையையே பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில்தான், ஆன்லைன் முன்பதிவின் போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக ரூ.10 ம், ஏசி வகுப்புகளுக்கு ரூ.20 ம் யுபிஐ வழியாக புக் செய்யும் போது பிடித்தம் செய்யப்படுவதாகவும், யுபிஐ பயன்பாட்டை மக்களிடையே அரசு பிரபலப்படுத்தி வரும் நிலையில் ஏன் இந்த கட்டண பிடிப்பு என்று மாநிலங்களவையில் சஞ்சய் சிங் எம்பி கேள்வி எழுப்பினார்.
மத்திய அமைச்சர் விளக்கம்
இந்தக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:- ஆன்லைன் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியால் பயணிகளின் அலைச்சல் மற்றும் பயண செலவு மிச்சமாகிறது. ஆன்லைன் டிக்கெட் வசதியை வழங்குவதற்கும், பராமரிப்பு செலவை ஈடுகட்டுவதற்கும் ஐ.ஆர்.சி.டி.சி கணிசமான தொகை செலவு செய்கிறது.
டிக்கெட் புக்கிங் வசதியை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக வசதி (convenience) கட்டணம் பெயரளவில் வசூலிக்கப்படுகிறது. தற்போது 87 சதவீத டிக்கெட் முன்பதிவு ஆன்லைன் வழியாகவே நடைபெறுகிறது" என்றார்.
போலி டிக்கெட் முன்பதிவு
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், போலியாக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து அதிக தொகைக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அதை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஐஆர்சிடிசி எடுத்து வருகிறது.
மோசடிகளை தடுக்கும் வகையில் தற்போது தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் இணைக்கப்பட்ட ஐடிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல, 2.5 கோடிக்கும் அதிகமாக பயனர் ஐடிகள் அண்மையில் முடக்கப்பட்டு இருந்தது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications