"கவனமாக இருங்கள்".. வடக்கில் குறி வைக்கப்படும் "தலைகள்".. உஷாரான திமுக.. அமைச்சர்களுக்கு போன உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் அமைச்சர்களை கவனமாக இருக்கும்படி ஆளும் தரப்பு உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
டெல்லி மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் குறி வைக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த ஜூலை 23ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டில் இருந்தும் அவருக்கு நெருக்கமான அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்தும் 20 கோடி ரூபாய் அமலாக்கத்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டது, இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மணிஷ் சிசோடியா
இதன் சூடு அடங்கும் முன்பே டெல்லியில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிபிஐ மூலம் குறி வைக்கப்பட்டுள்ளார். டெல்லியில் மது விற்பனை மற்றும் டெண்டர் தொடர்பான கலால் வரி விதிப்பில் முறைகேடு செய்யப்பட்டதாக சிசோடியா மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. அம்மாநில கலால் வரி கொள்கைகளை சில மதுபான நிறுவனங்களுக்கு ஏற்றபடி மணிஷ் சிசோடியா மாற்றியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதில் சிபிஐ சார்பாக மணிஷ் சிசோடியா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவருக்கு லுக் அவுட் நோட்டீசும் கொடுக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்கள் குறி வைக்க வாய்ப்பு
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் அமைச்சர்களை கவனமாக இருக்கும்படி ஆளும் திமுக தரப்பு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடமாநிலங்களில் அடுத்தடுத்து ரெய்டு நடக்கிறது. அடுத்து தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களை குறி வைக்க வாய்ப்பு உள்ளது. அண்ணாமலையும் இதை சுட்டிக்காட்டி உள்ளார். அதனால் நாம் கவனமாக இருக்க வேண்டும். நம் மீது தவறு இல்லாமல் இருக்கலாம்.

தேர்தல் நேரம்
நம்மில் பல அமைச்சர்கள் மீது எந்த புகாரும் இல்லை. ஆனால் அதற்காக அலட்சியமாக இருக்க கூடாது. வேண்டும் என்றே நெருக்கடி கொடுப்பதற்காக ரெய்டு நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளை டெல்லி குறி வைத்து இருக்கிறது. நமக்கு எதிராகவும் இப்படி அவர்கள் செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால் கவனமாக இருங்கள், என்று அமைச்சர்களுக்கு ஆளும் தரப்பு அறிவுரை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை
தேசிய அளவில் நாம் பெரிய கட்சியாக இருக்கிறோம். 3வது பெரிய கட்சியாக நாம் இருக்கிறோம். அதனால் நம்மை "டெல்லி" குறி வைக்க வாய்ப்பு உள்ளது. நாம் இதற்கெல்லாம் பயப்பட கூடாது. நம் மீது தவறு இல்லை. தேசிய அளவில் நாம் கவனம் பெற்று வருகிறோம். அதனால் நம்மை குறி வைக்க பார்ப்பார்கள். அதனால் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆளும் தரப்பு அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி இல்லை
முக்கியமாக டெண்டர் விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். டெண்டர் விடும் போது கவனமாக விட வேண்டும். அதில் மட்டும் தவறு நடக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதோடு அமைச்சர்களின் செயல்களை ஆளும் தரப்பு கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications