இதுதான் மோடி.. அரசு ஊழியர்களுக்கு பண மழைதான்.. வருகிறது முக்கிய அறிவிப்பு.. இதை முதல்ல படிங்க
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை மத்திய பாஜக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் வருமானம் பெரிய அளவில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. ஆட்சியில் இருந்த பாஜக அங்கு ஆட்சி இழந்துள்ளது. 136 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் அங்கே மாபெரும் வெற்றியை பதிவு செய்ய உள்ளது.

பாஜக 64 இடங்களுக்கு சுருங்க உள்ளது. மஜத வெறும் 21 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில்தான் மத்திய அரசு பணியாளர்களுக்கு பிரதமர் மோடி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் வருடம் தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் காரணமாக வரப்போகும் இந்த தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.
இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான இரண்டு முக்கியமான அறிவிப்புகளை மத்திய பாஜக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் வருமானம் பெரிய அளவில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிப்பு 1: அதன்படி, மீண்டும் அகவிலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மாநில அரசு பணியாளர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படியே மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ம் தேதி அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது.
அதுவரை 38% ஆக இருந்தது 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.
அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் இன்னும் 2 மாதங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் முன்கூட்டியே.. அதாவது ஜூன் மாத இறுதியிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவிப்பு 2: தற்போது ஃபிட்மென்ட் காரணி 2.57 சதவிகிதமாக உள்ளது. இதை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் உள்ளன. இது உயரும் பட்சத்தில் வருமானமும் தானாக உயரும். உதாரணமாக தற்போது 18 ஆயிரம் அடிப்படை சம்பளம் கொண்டவர்கள் இந்த ஃபிட்மென்ட் காரணி காரணமாக 26 ஆயிரம் வரை பெறுவார்கள்.
இதுவே ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு செய்யப்பட்டு 3.68 சதவிகிதம் ஆக்கப்பட்டால் மற்ற சம்பள உயர்வுகள், சலுகை உயர்வுகளுடன் சேர்த்து அவர்களின் வருமானம் 63 ஆயிரம் வரை உயரும். ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு தொடர்பாக அறிவிப்பும் விரைவில் வரலாம் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications