Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக கூட்டணிக்கு தாவும் உத்தவ் தாக்கரே? ‛இந்தியா’ கூட்டணி மீட்டிங் புறக்கணிப்பு.. பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இன்று டெல்லியில் பாஜக கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்துகின்றன. இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே இந்த மீட்டிங்கை புறக்கணிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

நம் நாட்டில் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு கட்சிகளை இணைத்து 272 எம்பிக்களை கொண்டிருக்க வேண்டும்.

india alliance india bloc politics maharashtra delhi

ஆனால் இந்த முறை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணியை சேர்த்தால் பாஜகவுக்கு மொத்தம் 293 இடங்கள் உள்ளன. இதனால் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமையலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பாஜக தலைமை கூட்டணி ஆட்சியில் தயக்கம் காட்டுகிறது.

ஏனென்றால் பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயடுவின் தெலுங்கு தேசம் 16 தொகுதி, நிதிஷ் குமார் கட்சி 12 இடங்களில் ஜெயித்துள்ளது. இவர்கள் அடிக்கடி கூட்டணி மாறுவார்கள் என்பதால் அவர்களை நம்புவதா, வேண்டாமா என்ற நிலையில் பாஜக உள்ளது.

அதேபோல் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் அதிகபட்சமாக 99 இடங்களில் வென்றுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 37 தொகுதியிலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், முதல்வர் ஸ்டாலின் திமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக ‛இந்தியா' கூட்டணி கட்சிக்கு மொத்தம் 234 இடங்கள் உள்ளன.

ஒருவேளை பாஜக கூட்டணி ஆட்சி அமைக்காவிட்டால் பிற கட்சிகளை இழுத்து ஆட்சியை பிடிக்க ‛இந்தியா' கூட்டணி முடிவு செய்துள்ளது. இதற்காக நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவிடம் ‛இந்தியா' கூட்டணி கட்சியின் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். இதுவும் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் கூட மத்தியில் ஆட்சியமைக்க பாஜக தயங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்நிலையில் தான் இன்று டெல்லியில் பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தான் மத்தியில் ஆட்சி அமைப்பது பற்றியும், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. இத்தகைய சூழலில் தான் ‛இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ‛இந்தியா' கூட்டணி கட்சியின் மீட்டிங்கை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தான் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அதாவது மகாராஷ்டிராவில் ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகியவை கூட்டாக போட்டியிட்டன. மொத்தம் 48 தொகுதிகள் உள்ள மகாராஷ்டிராவில் காங்கிரஸ் 13 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 இடங்களிலும், சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் 8 இடங்களிலும் ஜெயித்தது. இதன்மூலம் ‛இந்தியா' கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது. மீதமுள்ள 18 இடங்களில் பாஜக 13 சீட், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 சீட், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தான் உத்தவ் தாக்கரே திடீரென்று ‛இந்தியா' கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்து இருப்பது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர் பாஜக கூட்டணியின் பக்கம் சாய்கிறாரா, என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ஏனென்றால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் கட்சி மீது கடும் கோபம் உள்ளது. சில தொகுதிகளில் உத்தவ் தாக்கரே அணியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ் சரியாக பணி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே ‛இந்தியா' கூட்டணியை புறக்கணித்து பாஜக பக்கம் சாய்கிறாரா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

மேலும் உத்தவ் தாக்கரேவுக்கு பாஜக ஒன்றும் புதிய கட்சி அல்ல. பாஜகவுக்கும், உத்தவ் தாக்கரேவுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. இருகட்சிகளும் தான் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கூட்டணியில் இருந்து வந்தன. கடந்த 2019ல் மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில் இருவரும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. ஆனால் உத்தவ் தாக்கரே முதல் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி கேட்டார். பாஜக கொடுக்க மறுத்தது. இதனால் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து பாஜக இல்லாத ஆட்சியை அமைத்து முதல்வரானார். இரண்டரை ஆண்டு இந்த ஆட்சி நடந்தது.

அதன்பிறகு சிவசனோவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு ஏக்நாத் ஷிண்டே அணியினர் பாஜகவுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் அமர்ந்தனர். ஏக்நாத் ஷிண்டே முதல்வராக செயல்பட்டு வருகிறார். அதோடு சிவசேனா இரண்டாக உடைந்தது. இதற்கு பாஜக தான் முக்கிய காரணம் என உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆதரவின் அடிப்படையில் உண்மையான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் - சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 9 லோக்சபா தொகுதிகளில் வென்ற நிலையில் இன்றைய ‛இந்தியா' கூட்டணி கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+