ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை பாராட்டிய இஸ்ரேல்.. இந்தியாவுடன் துணை நிற்பதாக உறுதி!
டெல்லி: தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியை பாராட்டியுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம், இந்தியாவுடன் துணை நிற்கிறோம் என்று கூறியிருக்கிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அதிகாரி இன்று இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங்குடன் பேசினார். அப்போது தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

"பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான போராட்டத்திற்கு இஸ்ரேல் முழுமையான ஆதரவை வழங்குகிறது. இந்திய நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாராட்டுகிறோம்" என்றும் கூறியிருக்கிறார்.
கடந்த காலங்களில் இந்தியாவில் மேற்கொண்ட தீவிரவாத நவடிக்கைகள் அனைத்தும் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது தெளிவாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்படித்தான் பஹல்காம் தாக்குதலிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, இதற்கான எதிர் நடவடிக்கையை இந்திய மேற்கொண்டது. இதற்கு முன்னரும் கூட தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா வலுவான பதிலடியை கொடுத்திருக்கிறது.
அந்த வகையில் இந்த முறையும் பதிலடியை தொடங்கியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டிருந்தது. மே 8ம் தேதி அதிகாலை 1.05 மணிக்கு இந்த ஆபரேஷன் தொடங்கியது. பிளான்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லையை தாண்டாமல் துல்லியமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதி மசூத் அசாரின் உறவினர்கள் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பயங்கரவாதிகள் மீதான தாக்குதலை தன் மீதான தாக்குதல் என பாகிஸ்தான் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தது. இந்தியா மீது சுமார் 300க்கும் அதிகமான ட்ரோன்களை கொண்டு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டது. அதே நேரம் இந்தியா மற்றொரு துல்லிய தாக்குதலை மேற்கொண்டது.
அதில், பாகிஸ்தானின் ராணுவ விமான தளங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் நொந்துபோன பாகிஸ்தான் உடனடியாக போரை நிறுத்த அமெரிக்காவிடம் கெஞ்சியது. இந்த சமயத்தில் உலக நாடுகள் யார் பக்கம் நிற்கின்றன என்பது தெரிய வந்தது. அதன்படி பாகிஸ்தானுக்கு ஆதரவாக அஜர்பைஜான், துருக்கி நின்றன. இந்தியாவுக்கு ஆதரவாக இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆஜராகியிருந்தது. தொடக்கம் முதல் இஸ்ரேல் நமக்கு உறுதியான ஆதரவை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமிர் பராம் இந்தியாவுக்கான ஆதரவை மீண்டும் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications