விண்வெளி பயணத்தில் இணையும் பிரதமர் மோடி? இஸ்ரோ தலைவர் கொடுத்த முக்கிய அப்டேட்.. இதுதான் விஷயம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கூட விண்வெளிக்கு பயணிக்க முடியும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

இந்தியாவின் சார்பில் முதன்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில், இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கான சோதனைகள் ஏறத்தாழ அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்திய மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல விண்வெளிக்கு செல்லும் வீரர்களையும் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.

ISRO Narendra Modi

இந்நிலையில், விண்வெளிக்கு பிரதமர் மோடி கூட பயணிக்கலாம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சோம்நாத் கூறியதாவது, "பிரதமர் மோடிக்கு பல பொறுப்புகள் இருக்கின்றன. அதில் முதன்மையானதாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் மிஷனை வெற்றிகரமாக முடிக்கும் பொறுப்பும் இருக்கிறது. ககன்யான் திடத்தின் மூலம் முதன் முதலில் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் போது அவர்கள் ஒரு நாள் முழுவதுமாக விண்வெளியில் கழிப்பார்கள். இந்த நேரத்தில் பூமியை 16 முறை அவர்கள் சுற்றி வருவார்கள். இந்த பயணத்தின்போது பல்வேறு சோதனைகள் நடைபெற இருக்கிறது.

இந்த ஆண்டு ககன்யான் திட்டத்தில் நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். மூன்று முக்கியமான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் பணி, பூமியின் சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி சுற்றி வருவது. இதற்காக ஆளில்லா விண்கலத்தை ஏவ இருக்கிறோம். இரண்டாவதாக விண்வெளி வீரர்களுக்கு தேவைப்படும் கருவிகள் குறித்த சோதனை. இறுதியாக, ஏவுதளத்தை சரிபார்த்தல்.

வரும் 2028ம் ஆண்டில் விண்வெளியில் இந்தியா தனக்கென சொந்தமாக ஆய்வு மையத்தை அமைக்கும். இந்த ஆய்வு மையம் 'பாரதிய அந்தரிஷ்' என்கிற பெயரில் அழைக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

அப்போது செய்தியாளர்கள் குறிக்கிட்டு பிரதமர் விண்வெளிக்கு பயணிக்க முடியுமா? என்று கெள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சோம்நாத், "இந்தியாவின் முதல் மனிதப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி விண்வெளிக்குச் செல்ல முடியும்" என்று கூறியுள்ளார்.

ககன்யான் திட்டத்தில் மனிதர்கள் மட்டுமல்லாது அவர்களுக்கு தேவையான ஏராளமான பொருட்களையும் எடுத்து செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எனவே அதற்கேற்றார் போல பொருத்தமான ராக்கெட் தேவை. இதற்காக இஸ்ரோ LVM3 ராக்கெட்டை தேர்ந்தெடுத்திருக்கிறது. இதனால் சுமார் 8 டன் எடைகொண்ட பொருட்களை பூமியிலிருந்து 200 கி.மீ உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும். சந்திரயான் 3 மிஷனில் இந்த ராக்கெட்தான் பயன்படுத்தப்பட்டது.

இந்த ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரோ வெற்றிகரமாக பரிசோதித்திருந்தது. இப்படியாக தொடர் பரிசோதனைகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் விரைவில் மனிதர்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய வீரர்கள் பலர் இதுவரை வெளிநாட்டின் ராக்கெட்டுகளில்தான் விண்வெளிக்கு பயணித்துள்ளனர். ஆனால், ககன்யான் திட்டம் மூலம் முதன் முறையாக இந்திய ராக்கெட் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+