இந்த "ஜூலியம்மாவுக்கு" 8 நியூபார்ன் பேபிஸ் இருக்காம்.. ஊரெல்லாம் டாக்டர், என்ஜினியர்னு விவாதம் வேற!
டெல்லி: இந்த "ஜூலியம்மா"வுக்கு 8 குட்டிகளாம். அது டாக்டரா, என்ஜினியரா, ஃபைட்டரானு இப்பவே அனல் பறக்கும் விவாதங்களில் நெட்டிசன்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
காவல் துறையில் பல வகையான நாய்கள் பராமரிக்கப்பட்டு இவற்றின் மூலம் துப்பு துலங்க வழி வகை செய்யப்படுகிறது. நிறைய வகையான நாய்கள் போர் காலத்தின் போது எதிரிகளை வீழ்த்தவும் செய்கின்றன.
இதற்காக நாய்களுக்கான தேசிய பயிற்சி மையம் நாய்களுக்கு பயிற்சி அளித்து அவை தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நாய்கள் இடியாப்ப சிக்கலில் உள்ள குற்றங்களையும் எளிதில் கண்டுபிடிக்க துப்பு கொடுத்துள்ளது. குண்டுவெடிப்பு நேரங்களில் வெடிகுண்டு எங்கே இருக்கிறது என்பதை மோப்ப சக்தியால் கண்டுபிடித்து உதவுகிறது.

தேசிய பயிற்சி மையம்
இந்த வகையில் தேசிய பயிற்சி மையத்தில் பராமரிக்கப்படும் மாலினோயிஸ் ஹீரோ கே 9 என்ற இனத்தை சேர்ந்த ஜூலி என்ற நாய் போரில் பயன்படுத்தப்படும் முக்கியமான நாய் இனத்தை சேர்ந்தததாகும். இந்த இனத்து நாய்களை நேட்டோ படைகள் போர்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

8 குட்டிகள்
அந்த வகையில் இந்தோ திபெத்திய எல்லை காவல் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் ஜூலி கருவுற்றிருந்தது. இந்த நாய் கடந்த 25 ஆம் தேதி 8 குட்டிகளை ஈன்றது. தாயும் சேயும் நலம் என இந்தோ திபெத்திய எல்லை காவல் துறை தெரிவித்திருந்தது. இந்த 8 குட்டிகளும் போராளிகள் என்றும் தெரிவித்திருந்தது.

எந்த துறை
இதில் என்ன விஷயம் என கேட்கிறீர்களா. இந்த ஜூலிக்கு பிறந்த 8 குட்டிகள் குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் விவாதம் செய்து வருகிறார்கள். அதென்ன ஜூலிக்கு பிறந்த 8 குட்டிகளும் போராளியாகத்தான் வேண்டும். அது விரும்பும் துறையை தேர்வு செய்யட்டும் என்கிறார் ஒரு வலைஞர்.

8 பேரும் என்னவாக விருப்பம்?
இதற்கு இன்னொருவரோ ஆமாம் அந்த 8 பேரும் மருத்துவர்களாகவோ பொறியாளர்களாகவோ ஆகக் கூடும், யாருக்கு தெரியும்? என்கிறார் இன்னொரு வலைஞர். தாய்நாட்டிலிருந்து தயார் செய்யப்படும் போராளிகள் என அந்த 8 குட்டிகளையும் இன்னொருவர் வர்ணித்துள்ளார். இப்படியாக ஒரு போராளி நாய் குட்டி போட்டதை வைத்து சமூகவலைதளங்களில் இது போன்ற கருத்துகள் நிலவுகின்றன.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications