பண்றதை பண்ணிட்டு.. எப்படி பதுங்கி இருக்காங்கனு பாருங்க! காஷ்மீரில் ட்ரோனில் சிக்கிய தீவிரவாதிகள்
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்று அதிகாலை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். முன்னதாக அவர்கள் துப்பாக்கியுடன் குடிசை பகுதியில் பதுங்கியிருந்தது ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ட்ரோன் காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் ஜம்மு காஷ்மீர் போலீஸ், ராணுவம் ஆகியவை இணைந்து பணியாற்றி வருகின்றன.

இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவின் டிரால் பகுதியில் தேடுதல் வேட்டையை ராணுவமும், போலீசும் தொடங்கியது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 48 மணி நேரத்தில் நடக்கும் இரண்டாவது என்கவுண்ட்டர் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த செவ்வாய்க்கிழமை ஷோபியனில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இன்று நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் சம்பவத்திற்கு முன்னர், தீவிரவாதிகளை தேடும் பணியின்போது ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த ட்ரோன் காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில், இரண்டு பேர் கையில் துப்பாக்கியுடன் ஒரு குடிசை பகுதிக்குள் பகுதியிருந்திருக்கின்றனர். கான்கிரீட் வீட்டின் பின்புறத்தில் இந்த குடிசை அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே தடுப்புக்கு கான்கிரீட் சுவரை பயன்படுத்தி, ராணுவத்தினர் மீதும், போலீசார் மீதும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். பதிலுக்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவரும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது தவிர நான்காவதாக ஒரு பயங்கரவாதி பதுங்கியிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இருப்பினும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆயினும் இந்திய ராணுவம் தனது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது.
BIG WIN in Tral Encounter:
— Anuvesh Rath (@AnuveshRath) May 15, 2025
Drone footage of encounter
Massive success for J&K Police, Indian Army & intel units.
Stay tuned for more updates #TralEncounter #Kashmir #JeM #IndianArmy #JKPolice #CounterTerrorism #IndiaFightsTerror #BreakingNews #NationalSecurity #FollowForUpdates pic.twitter.com/4e7g3vmbFj
கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பொதுவாக தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்துவது கிடையாது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படி ஒரு நாசகர வேலையை செய்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றது. இது லக்ஷர் இ தொய்பாவின் கிளையாகும்.
எனவே இந்த பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க ஆபரேஷன் சிந்தூரை இந்தியா மேற்கொண்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தீவிரவதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. பஹல்காமில் தாக்குதல் நடத்தியதற்கு இங்கிருப்பவர்களின் உதவி தீவிரவாதிகளுக்கு தேவைப்பட்டிருக்கும். அப்படி உதவியவர்கள் யார்? எதற்காக உதவினார்கள்? இங்கு பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கியிருக்கிறார்களா? என்பது குறித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications