அரசு ஏர்லைன்ஸ் இருந்தா இப்படி நடக்குமா? காஷ்மீர் கொடூரத்தை வைத்து..காசு பார்த்த கார்ப்ரேட் ஏர்லைன்ஸ்
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற மக்கள் பலர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் இதை பயன்படுத்தி கார்ப்ரேட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் காசு பார்க்க தொடங்கி உள்ளன.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சொந்த ஊர் திரும்பும் பயணிகளால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செல்வார்கள். இந்நிலையில் நேற்று மாலை பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே சுற்றுலா பயணிகளை சரமாரியாக சுட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. முக்கியமாக ஒவ்வொருவரையும் சுடும் முன் அவர்கள் இந்துக்களா என்பதை உறுதி செய்ய கீழாடையை உருவி பார்த்துவிட்டு சுட்டுக்கொன்றுள்ளனர்.
Just look at how Private Airlines are charging 3 times more fare from the panick stricken tourists of Sri Nagar. pic.twitter.com/uFyc3TTgr5
— Manish RJ (@mrjethwani_) April 23, 2025
விமான டிக்கெட்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற மக்கள் பலர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் இதை பயன்படுத்தி கார்ப்ரேட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் காசு பார்க்க தொடங்கி உள்ளன.
விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனாலும் 8-9 ஆயிரம் விற்கப்படும் டிக்கெட்டுகள் இங்கிருந்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ஸ்ரீநகர் - சென்னை டிக்கெட் இயல்பு நாட்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் இன்று 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும். ஸ்ரீநகருக்கு கூடுதல் விமான சேவைகளை இயக்க விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுரை வழங்கி உள்ளது.

ஆனாலும் அரசிடம் சொந்த விமானங்கள் இல்லை. ஏர்இந்தியாவை தனியாருக்கு விற்றுவிட்டனர். இதனால் தனியார் மட்டுமே விமான விலைகளை நிர்ணயம் செய்கிறார்கள். அரசு இருந்தால் குறைந்த விலைக்கு.. நியாயமான விலைக்கு கட்டணம் நிர்ணயம் செய்வார்கள். அதை சமாளிக்க தனியாரும் போட்டிக்கு குறைந்த விலைக்கு கட்டணம் விதித்து இருப்பார்கள். ஆனால் இப்போது டிக்கெட் விலை 30 ஆயிரம் டூ 40 ஆயிரம் ரூபாய்க்கு எல்லாம் விற்கப்படுகிறது.
யார் தாக்குதல் நடத்தியது?
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. முக்கியமாக ஒவ்வொருவரையும் சுடும் முன் அவர்கள் இந்துக்களா என்பதை உறுதி செய்ய கீழாடையை உருவி பார்த்துவிட்டு சுட்டுக்கொன்றுள்ளனர்.
முக்கியமாக சில தாக்குதல்களில் சரியாக குழந்தைகளோடு இருக்கும் கணவன் - மனைவிகளில் , கணவனை மட்டும் குறி பார்த்து சுட்டு உள்ளனர். அதிலும் பெண் ஒருவரை சுடாமல்.. நான் ஏற்கனவே பல பெண்களை சுட்டுவிட்டேன். உன்னை விடுகிறேன். நீ போய் மோடியிடம் இதை சொல் என்று திமிராக பேசி உள்ளனர். சுடப்பட்ட ஆண்கள் எல்லாம் இந்துக்கள் தானா என்பதை உறுதி செய்த பின்பே தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications