காங்கிரஸ், பாஜகவிற்கு ஒருசேர ஷாக்.. மத்திய பிரதேசத்தில் ட்விஸ்ட்.. அதிர்ச்சி தந்த எக்சிட் போல் சர்வே
போபால்: மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கே எந்த கட்சி அதிக இடங்களை வெல்லும் என்று ஜான் கி பாட் தேர்தல் கருத்து கணிப்பு அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது. இதில் மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது.
பாஜக ஆட்சி: மத்திய பிரதேச சட்டசபை கிட்டத்தட்ட தமிழ்நாடு போன்றது ஆகும். இங்கே 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது.
சிவராஜ் சிங் சவுகான் அங்கே ஆட்சி அமைத்தார். அதன்பின் கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் 1 வருடத்தில் அங்கே கமல்நாத் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா கவிழ்த்தார். இவர் பாஜகவில் இணைந்து தன்னுடன் சில எம்எல்ஏக்களையும் அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தார். இதன்பின் வந்த இடைத்தேர்தலில் பாஜக கூடுதல் எம்எல்ஏக்களை மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார்;.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 இடங்களில் வென்றது. அதன்பின் 1 வருடத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிந்தியா தலைமையில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்றது. இதன் மூலம் 128 இடங்கள் என்று மெஜாரிட்டி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது.

கருத்து கணிப்பு: மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கே எந்த கட்சி அதிக இடங்களை வெல்லும் என்று ஜான் கி பாட் தேர்தல் கருத்து கணிப்பு அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது. இங்கே 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும்.
இந்த நிலையில் ஜான் கி பாத் கணிப்பில், காங்கிரஸ் 102-125 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது. பாஜக 100-123 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது. இதர கட்சிகள் 0-5 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கடந்த முறை போல இந்த முறையும் மத்திய பிரதேசத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
புதிய நிலவரம் என்ன?: தற்போது அங்கே 4 முறை சவுகான் முதல்வராக இருந்துவிட்டார். கடந்த முறையே ஆபரேஷன் கமலா மூலம்தான் ஆட்சிக்கு வந்தார். அதனால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக யோசிக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பெண்களுக்கு மாதம் உதவிதொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் மூலம் அடித்து மேலே வந்தது. இருந்தாலும் இந்த முறையும் மத்திய பிரதேசத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications