டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜேஎன்யூ தாக்குதல்.. தலைமறைவான 3 ஏபிவிபி உறுப்பினர்கள்.. டெல்லி போலீஸ் வலைவீச்சு!

ஜேஎன்யூவில் கலவரம் செய்ததில் முக்கிய பங்கு வகிக்கும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மூன்று மாணவர்கள் தலைமறைவாகி உள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜேஎன்யூ வீடியோவில் இருந்த பெண் அடையாளம் தெரிந்தது| Delhi police identifies masked woman

    டெல்லி: ஜேஎன்யூவில் கலவரம் செய்ததில் முக்கிய பங்கு வகிக்கும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மூன்று மாணவர்கள் தலைமறைவாகி உள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

    டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் நடந்த தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி இதை நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகி வருகிறதுநாளுக்கு நாள் புதிய தகவல்கள், உண்மைகள் வெளியாகி வருகிறது.

    JNU attack: 3 ABVP members absconded says Delhi police

    அங்கு கடந்த வாரம் மர்ம நபர்கள் விடுதிக்குள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். இதுதொடர்பாக இந்தியா டுடே ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி முக்கிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

    அங்கு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் பெயர் கோமல் சர்மா. இவர் டெல்லி பல்கலையில் படிக்கிறார். இவரும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏபிவிபி அமைப்பை சேர்ந்த முதலாம் ஆண்டு ஜேஎன்யூ மாணவர் அக்சத் அவாஸ்தி இந்த தாக்குதலில் முக்கியமானவர். இந்த ஸ்டிங் ஆபரேஷனில் முதலில் சிக்கியது இவர்தான். இந்த கலவரத்தில் ரோஹித் ஷா என்ற இன்னொரு நபருக்கும் முக்கிய தொடர்பு உள்ளது.

    இவர்களை விசாரிக்க டெல்லி போலீஸ் அழைப்பு விடுத்தது. ஆனால் மூன்று முறை அழைத்தும் டெல்லி போலீசை சந்திக்கவில்லை.மீண்டும் மீண்டும் அழைத்தும் இவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லவில்லை.

    இவர்கள் மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்கள் மூவரும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். அதில், இவர்களின் நண்பர்களிடம் விசாரித்து வருகிறோம். இவர்கள் தலைமறைவாகி உள்னனர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக தடயவியல் சோதனை இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது . நாளை மீண்டும் தடயவியல் சோதனை நடக்கும். டெல்லி ஜேஎன்யூவில் சிசிடிவி வீடியோக்களை பேர் முயற்சி வருகிறோம். இதுவரை சர்வரில் இருந்து வீடியோக்களை பெற முடியவில்லை.

    நாளை மீண்டும் தடயவியல் சோதனை குழு அங்கு சென்று சிசிடிவி ஆதாரம் உட்பட மற்ற ஆதாரங்களை பெறுவோம் என்று டெல்லி போலீஸ் கூறியுள்ளது.

    English summary
    JNU attack: Three ABVP members absconded says Delhi police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X