"நான் மனநிலை சரியில்லாதவனா?" கோபப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே.. உடனே மன்னிப்பு கேட்ட ஜே.பி.நட்டா
டெல்லி: நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்து வருகிறது. இன்றைய தினம் காங்கிரஸ் தலைவர் கார்கே ராஜ்யசபாவில் பிரதமர் மோடி மீது சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த நட்டா, மனநிலை சரியில்லாதவர் போல கார்கே பேசுவதாக விமர்சித்தார். நட்டா பேச்சு வருத்தமளிப்பதாக கார்கே கூறிய நிலையில், உடனடியாக தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்ட நட்டா, அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்றத்தில் இப்போது மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதலே ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தை முடக்கியும் வந்தனர். இதையடுத்து லோக்சபாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர்
நேற்றைய தினம் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு எம்பிக்களும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். நேற்று மாலை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசினார்.
இரண்டாவது நாளான இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்தது. அப்போது ராஜ்ய சபாவில் 'ஆபரேஷன் சிந்துார்' விவாதம் தீவிரமாக நடந்து வந்தது. ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி கார்கே சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார்.
நட்டா- கார்கே
இதற்கு அமைச்சர் ஜே.பி. நட்டா ஆட்சேபம் தெரிவித்தார். கார்கே தனது உரையை முடித்ததும், எழுந்த நட்டா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கார்கே மனநிலை தடுமாறிப் பேசியுள்ளார் என்றும் கார்கே உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதால், அவரது வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் நட்டா வலியுறுத்தினார்.
மன்னிப்பு கேட்ட நட்டா
நட்டா பேசிய பிறகு எழுந்த கார்கே, நட்டா தன்னை மனநிலை சரியில்லாதவர் என்று குறிப்பிட்டது வருத்தமளிப்பதாகக் கூறினார். தற்போதுள்ள பாஜக அரசில் தான் மதிக்கும் ஒரு சில அமைச்சர்களில் நட்டாவும் ஒருவர் என்றும் அவரே இப்படிப் பேசியது வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து நட்டா உடனடியாக தான் பேசிய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். தனது வார்த்தைகள் கார்கேவின் மனதைப் புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.
ராகுல் காந்தி
இரண்டாவது நாளான இன்று லோக்சபாவிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து காரசாரமான விவாதம் நடந்தது. லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி, ஆபரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருந்த போதே அது குறித்து பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவித்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய அரசின் செயல்பாடுகளே விமானப்படைக்குப் பின்னடைவாக அமைந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பிரதமர் மோடி
ராகுல் காந்தியைத் தொடர்ந்து பிரதமர் மோடி இந்த விவாதத்திற்குப் பதிலுரை அளித்தார். அப்போது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், எங்கு எப்போது தாக்குதல் நடத்தலாம் என்பதே ராணுவமே முடிவு செய்ததாகத் தெரிவித்தார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து நடந்து வருவதாகவும் எப்போது வேண்டுமானாலும் பதிலடி தரத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications