இந்தியா-சீனா இப்போ ப்ரெண்ட்ஸ்! கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குகிறது
டெல்லி: ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வரும் ஜூன் 30 ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது. மொத்தம் 250 பக்தர்கள் கொண்ட குழு, தலா 50 பேர் கொண்ட ஐந்து பிரிவுகளாகப் பிரிந்து, 22 நாட்கள் இந்த புனிதப் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.
உத்தராகண்ட் அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகம் இணைந்து டெல்லியில் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று மற்றும் பிராந்திய எல்லைப் பதட்டங்கள் காரணமாக 2020 முதல் யாத்திரை நிறுத்தப்பட்டிருந்தது. இந்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
சீனா தற்போது அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் மோதி வருவதால் இந்தியாவிடம் இறங்கி வர வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளது. எனவே டிராகன் இப்போது நட்புக்கரத்தோடு இந்தியாவை அணுகி வருவது குறிப்பிடத்தக்கது.

முதல் குழு ஜூலை 10 ஆம் தேதி லிபுலேக் கணவாய் வழியாக திபெத்துக்குள் நுழையும். கடைசி குழு ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரும்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குமாவுன் மண்டல் விகாஸ் நிகாம் (KMVN) இந்த யாத்திரையின் தரைவழி ஏற்பாடுகளான உணவு, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகளை நிர்வகிக்கும் முக்கிய நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு யாத்திரை தொடங்கும். தானக்பூர், தார்ச்சுலா, கூஞ்சி மற்றும் நபிடாங் வழியாக பக்தர்கள் திபெத்தில் உள்ள டக்லகோட்டை அடைவார்கள். புனித கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரியின் தரிசனத்திற்குப் பிறகு, பண்டி, செளகோரி மற்றும் அல்மோரா வழியாக மீண்டும் டெல்லி திரும்புவார்கள்.
இந்த யாத்திரை இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பான் மதத்தினருக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. கைலாஷ் மலையை வலம் வந்து மானசரோவர் ஏரியில் நீராடுவது மோட்சத்தை அளிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதிக உயரம் மற்றும் குளிரான காலநிலை காரணமாக போதிய உடற்பயிற்சி மற்றும் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் குழு ஜூலை 10 ஆம் தேதி லிபுலேக் கணவாய் வழியாக திபெத்துக்குள் நுழையும். கடைசி குழு ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரும்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குமாவுன் மண்டல் விகாஸ் நிகாம் (KMVN) இந்த யாத்திரையின் தரைவழி ஏற்பாடுகளான உணவு, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகளை நிர்வகிக்கும் முக்கிய நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு யாத்திரை தொடங்கும். தானக்பூர், தார்ச்சுலா, கூஞ்சி மற்றும் நபிடாங் வழியாக பக்தர்கள் திபெத்தில் உள்ள டக்லகோட்டை அடைவார்கள். புனித கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரியின் தரிசனத்திற்குப் பிறகு, பண்டி, செளகோரி மற்றும் அல்மோரா வழியாக மீண்டும் டெல்லி திரும்புவார்கள்.
இந்த யாத்திரை இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பான் மதத்தினருக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. கைலாஷ் மலையை வலம் வந்து மானசரோவர் ஏரியில் நீராடுவது மோட்சத்தை அளிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதிக உயரம் மற்றும் குளிரான காலநிலை காரணமாக போதிய உடற்பயிற்சி மற்றும் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications