'வெறுப்பு பிரசாரத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்..' இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி
டெல்லி: பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியைப் பாராட்டியுள்ள ராகுல் காந்தி, இந்த வெற்றி தொண்டர்களின் வெற்றி என்றும் வெறுப்பு பிரசாரத்தை எதிரான போராட்டம் தொடரும் என்றும் ட்வீட் செய்துள்ளார்
பல்வேறு காரணங்களால் காலியான சட்டசபை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல்களும் நடத்தப்பட்டன.
மொத்தம் 14 மாநிலங்களில் 29 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 மக்களவை தொகுதிகளிலும் கடந்த 30ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இடைத்தேர்தல் முடிவுகள்
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள இம்மாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கு இடைத்தேர்தல் நடந்த 3 சட்டசபை மற்றும் ஒரு மக்களவை என 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக இம்மாச்சல் பிரதேச பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் சொந்த மாவட்டத்தின் அமைந்துள்ள மண்டி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ராகுல் காந்தி
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றியை பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு வெற்றியும் எங்கள் கட்சி தொண்டரின் வெற்றியாகும். வெறுப்பு பிரசாரத்தை எதிர்த்துப் போராடுங்கள். யாருக்கும் அஞ்ச வேண்டாம்!" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். ராகுல் காந்தி மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் தேர்தல் முடிவுகள் குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ரந்தீப் சிங் சுர்ஜேவாலா
பிரதமர் நரேந்திர மோடி தனது ஆணவத்தை விட்டுவிட்டு மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ட்வீட் செய்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசலை அதிக விலைக்கு விற்று பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மக்களின் வலியை அலட்சியம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஹரியானா
ஹரியானாவில் இந்தியத் தேசிய லோக்தள தலைவர் அபய் சவுதாலாவிடம் 6,700 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்தார். சௌதாலா மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் விவசாய சட்டங்களுக்கு எதிராக உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.

பாஜக நிலை
அதேநேரம் வடகிழக்கில் பாஜகவுக்குச் சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. அஸ்ஸாமில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சியான யுனைடெட் பார்ட்டி பீப்பிள்ஸ் லிபரல் கட்சியும் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேகாலயாவில் 2 இடங்களில் பாஜக கூட்டணிக் கட்சி வென்றுள்ளது. அதேநேரம் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிடமும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடமும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
-
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications