மத்திய அரசிடம் வந்த உத்தரவு.. டெல்லி பட்ஜெட் தாக்கல் நிறுத்திவைப்பு.. கெஜ்ரிவால் பரபர குற்றச்சாட்டு
டெல்லி பட்ஜெட் இன்று தாக்கலாக இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டெல்லி: டெல்லியின் பட்ஜெட்டை ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்யவிருந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களிலும் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
அதேபோல டெல்லியிலும் இந்த மோதல் இருக்கிறது. அதிலும் டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் பல சூழல்களில் மத்திய அரசுக்கே நேரடியாகப் பல அதிகாரம் இருக்கிறது. இதுவும் டெல்லி ஆம் ஆத்மி அரசுக்குச் சிக்கலாகவே இருக்கிறது.

மோதல் போக்கு
இதனால் அங்கு இரு தரப்பிற்கும் இடையே கடந்த காலங்களிலும் கூட மோதல் போக்கே நிலவி வருகிறது. ஏற்கனவே, டெல்லி ஆம் ஆத்மி அரசில் முக்கிய அமைச்சர்களாக இருந்தவர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் உச்சத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில் இன்று தாக்கலாக இருந்த டெல்லி பட்ஜெட் மத்திய அரசின் உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

ஒப்புதல் தரவில்லை
பாஜகவுடனான மற்றொரு மோதலை தொடங்கும் வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்வதை நரேந்திர மோடி அரசு நிறுத்தி வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் டெல்லி தலைமைச் செயலர் தேவையான அனைத்து தகவல்களையும் உள் துறை அமைச்சகத்திடம் அனுப்பியதாகவும் இருப்பினும் அதற்கு ஒப்புதல் தரவில்லை என்று அம்மாநில நிதியமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் இல்லை
சில மர்மமான காரணங்களால் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் அவர் அளித்த பேட்டியில், "இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்திய வரலாற்றில் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது" என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

சில காரணங்கள்
டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 17ஆம் தேதி தொடங்கியது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு அவரிடம் இருந்த நிதித்துறை கெஹ்லோட்டிம் சென்றது. அவர் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருந்தார். இதற்காகக் கடந்த மார்ச் 10ஆம் தேதியே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதாக கெஹ்லோட் தெரிவித்தார். இருப்பினும், சில காரணங்களுக்காக மத்திய அரசு அனுமதி தர மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கடிதத்தை மறைத்தனர்
இது குறித்து அவர் கூறுகையில், "மார்ச் 17ஆம் தேதி சில காரணங்களுக்காக மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்து தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளது. இருப்பினும், அவர் மூன்று நாட்களுக்கு இந்த கடிதத்தை அவர் மறைத்து வைத்திருந்தார். நேற்று மதியம் 2 மணிக்குத்தான் இந்த கடிதத்தைப் பார்த்தேன். அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை 6 மணிக்குத் தான் இந்த கடிதத்தை தந்தார்கள். இன்று பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், கடைசி நிமிடத்தில் தான் எனக்குத் தெரிய வந்தது. டெல்லியின் பட்ஜெட்டை தாமதப்படுத்தியதில் டெல்லியின் தலைமைச் செயலாளர் மற்றும் நிதிச் செயலாளரின் பங்கு விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications