தமிழகம் வழியில் கேரளா-இந்தியில் பதில் அனுப்பிய மத்திய அமைச்சருக்கு மலையாளத்தில் ரிப்ளை தந்த எம்பி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்; ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவை தொடர்பாக கேரளா எம்பி ஜான் பிரிட்டாஸுக்கு மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, இந்தி (ஹிந்தி) மொழியில் பதிலளித்திருந்தார். இதற்கு எதிர்ப்புதெரிவித்து மலையாள மொழியில் மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டுவுக்கு கடிதம் அனுப்பி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் கேரளா சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ்.

கேரளாவை சேர்ந்த சிபிஎம் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ், ராஜ்யபா சிபிஎம் குழுவின் துணைத் தலைவராக உள்ளார். ரயில்வே துறைக்கு ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஜான் பிரிட்டாஸ் எம்பி கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கு மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, இந்தி மொழியில் பதிலளித்து கடிதம் அனுப்பி இருந்தார். இதனால் கேரளா எம்பி ஜான் பிரிட்டாஸ் கடும் அதிருப்தி அடைந்தார்.

hindi imposition kerala tamilnadu

இதற்கு பதிலடியாக, மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டுவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார் ஜான் பிரிட்டாஸ். அந்த கடிதத்தை அவரது தாய்மொழியான மலையாள மொழியில் எழுதி அனுப்பினார். இந்தியில் மத்திய இணை அமைச்சர் அனுப்பிய கடிதத்தையும் மலையாள மொழியில் தாம் அனுப்பிய பதில் கடிதத்தையும் தமது எக்ஸ் பக்கத்தில் ஜான் பிரிட்டாஸ் எம்பி பகிர்ந்துள்ளார்.

அதில், எம்பிக்களுக்கு பொதுவாக ஆங்கிலத்தில்தான் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய இணை அமைச்சர் இந்தி மொழியில் கடிதம் அனுப்பியதால் பதிலுக்கு மலையாள மொழியில் கடிதம் எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல தமிழ்நாட்டு ராஜ்யசபா திமுக எம்பியான புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா கடந்த அக்டோபர் தமது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், ரயில்வே இணை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து எப்போதும் இந்தியில்தான் கடிதம் வருகிறது. அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து "எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்" என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே கடிதம் வருகிறது. தற்போது அவருக்கு "புரியும்படி" பதில் அனுப்பி உள்ளேன். இனி புரிந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் என பதிவிட்டிருந்தார்.

இந்தியில் கடிதம் அனுப்பிய ரயில்வே இணை அமைச்சருக்கு தமிழ் மொழியில் பதில் அனுப்பி இருந்தார் திமுக எம்பி அப்துல்லா. தற்போது தமிழகத்தை பின்பற்றி கேரளா எம்பி ஜான் பிரிட்டாஸும் மலையாள மொழியில் கடிதம் அனுப்பி இந்தி திணிப்புக்கு பதிலடி தந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+