நில மோசடி வழக்கு: ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் தந்த ஹைகோர்ட்!
டெல்லி: நில மோசடி வழக்கில் 6 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனை கைது செய்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பிர்ஸா முண்டா சிறையில் ஹேமந்த் சோரன் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
நில மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரனுக்கு முதலில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. இவ்வழக்கில் ஹேமந்த் சோரனை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனடிப்படையில் விசாரணைக்கு ஆஜரானர் ஹேமந்த் சோரன். இதனையடுத்து மீண்டும் விசாரணைக்கு அழைத்தது அமலாக்கத்துறை. ஆனால் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார். அவருக்காக டெல்லி பங்களாவில் 30 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ரூ36 லட்சம் ரொக்கப் பணமும் கைப்பற்றது.

இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு திரும்பிய ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 6 மணிநேர விசாரணைக்குப் பின்னர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை. இதனால் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். அவருக்குப் பதில் சாம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேமந்த் சோரன், இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருணாப் சவுத்ரி, முதல் கட்ட தகவலின் படி நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் குற்றவாளி இல்லை. ஜாமீனில் விடுதலையானாலும் குற்றம் செய்யவும் வாய்ப்பில்லை என்றார். இந்த வாதத்தை ஏற்று ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.












Click it and Unblock the Notifications