என்னங்க இது! வீட்டுக்குள்ள ஜீப் நிக்குது.. ஆனந்த் மகிந்திரா போட்ட ட்விட்.. உற்று பார்த்த நெட்டிசன்ஸ்
டெல்லி: ஜீப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள டிவி ஸ்டேண்ட் ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா, இவ்வளவு பெரிய டேஷ் போர்டு ஸ்கிரீனை நான் பார்த்தது இல்லை என ஜாலியாக பதிவிட்டு புதிய டிசைனை பராட்டும் வகையில் பதிவிட்டுள்ளர். ஆனந்த் மகிந்திராவின் ட்விட் இணையத்தில் அதிகம் பரவுகிறது.
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று மகிந்திரா. வாகன உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் மகிந்திரா நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் ஆனந்த் மகிந்திரா. நாடறிந்த தொழில் அதிபராக இருக்கும் ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர். அவரது ட்விட் பதிவுகள் பெரும்பாம்பாலும் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

தனக்கு பிடித்தமான துணுக்குகள், தன்னம்பிக்கை ஊட்டும் வீடியோக்கள், எளிய பின்னணியில் இருந்து சாதிக்கும் நபர்கள், தான் கண்டு வியந்து பார்த்த இடங்கள் விஷயங்கள் குறித்து ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டு வருவார். ஆனந்த் மகிந்திராவை ட்விட்டரில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கின்றனர். ஆனந்த் மகிந்திராவின் ட்விட்டிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு ஆனந்த் மகிந்திராவின் ட்விட்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆனந்த் மகிந்திரா பதிவிட்ட ஒரு ட்விட் இணையத்தில் பெரிதும் கவனம் பெற்றது. அதேபோல், கர்மா தொடர்பாக ஆனந்த் மகிந்திரா பதிவிட்ட ஒரு ட்விட்ட இணையத்தில் அதிகம் பரவியது. அதாவது, ஆனந்த மகிந்திரா பதிவிட்ட ட்விட் பதிவில், " கர்மா, தலைவிதியை நீங்கள் நம்பவில்லை என்றால், இந்த வீடியோ உங்களை மீண்டும் யோசிக்க வைப்பதாக இருக்கும்" எனக்கூறி வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் கார் ஒன்று விபத்துக்குள்ளாவதும் விபத்து நடக்கும் இடத்திற்கு அருகில் இருந்த நபர் அந்த வழியாக செல்ல முடியாமல் சில நொடிகளுக்கு முன்புதான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வது போன காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. ஆனந்த் மகிந்திரவின் இந்த பதிவு நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர்.
இந்த நிலையில், ஆனந்த் மகிந்திரா இன்று வெளியிட்ட ஒரு ட்விட் பதிவு இணையத்தில் நெட்டிசன்களை ரசிக்க வைப்பதாக உள்ளது. ஒரு வீட்டில் மகேந்திர நிறுவனத்தின் ஜீப் வடிவ டிவி ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டாண்ட் மீது எல்.இ.டி டிவி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான டிசைனை பார்த்து வியந்து பதிவிட்டுள்ள ஆனந்த் மகிந்திரா.. "நன்றி..நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நான் பார்த்ததில் மிகப்பெரிய டேஷ்போர்டு ஸ்கிரீன் இதுதான்" என பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications