நீதித்துறை உட்கட்டமைப்பு மோசமாக உள்ளது.. தலைமை நீதிபதி என்.வி. ரமணா கவலை
நீதித்துறையில் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என தலைமை நீதிபதி என்வி ரமணா கேட்டு கொண்டார்
டெல்லி: நீதித்துறை உள்கட்டமைப்பு குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜுவிடம் கவலை தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, வரும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரிலாவது தேசிய நீதித் துறை உள்கட்டமைப்பு ஆணையத்தை ஏற்படுத்த உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டார்..
இந்த விழாவில், தலைமை நீதிபதி என்வி ரமணா கலந்துகொண்டு பேசும்போது, நீதி பெறுவதில் சாமானிய மனிதர்கள் பெரும் தடைகளை சந்தித்து வருவதால், அந்த சிக்கல் உடனே அகற்றப்பட வேண்டும் என்றார்.

உள்கட்டமைப்பு
அத்துடன் நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து பெருத்த கவலையை நீதிபதி ரமணா வெளிப்படுத்தினார்.. அப்போது அவர் பேசும்போது, இன்றைய நீதித்துறை உள்கட்டமைப்பு குறித்து பல கவலைகளை எழுப்பினார்... நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு ஆணையத்தை அமைப்பதற்கான முன்மொழிவை உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சரிடம் ரமணா கேட்டுக் கொண்டார்.

வசதிகள்
தொடர்ந்து அவர் சொன்னதாவது: "நீதிமன்ற கட்டமைப்பு என்பது, நீதித்துறையில் மிகவும் முக்கியம்... வழக்குகள் தேங்குவதை தடுக்க, உரிய நீதிமன்றங்கள் இருப்பதுடன், அவற்றில் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டியது அவசியம்.. ஆனால், இந்தியாவில் நீதிமன்றங்களுக்கான நீதித்துறை உள்கட்டமைப்பு எப்பொழுதும் பின்தங்கியே உள்ளது. நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் பாழடைந்த கட்டமைப்புகளுடன் காணப்படுகின்றன.. நீதித்துறையில் திறம்பட செயல்படுவது என்பது மிகக் கடினமாக உள்ளது..

கடினம்
காரணம், இந்தியாவில் நீதித்துறை உள்கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமலேயே உள்ளது.. இந்தியாவில் நீதிமன்றங்கள் இன்னும் பாழடைந்த கட்டமைப்புகளுடன் செயல்படுகின்றன. சில வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் உள்ள 5 சதவீத நீதிமன்ற வளாகங்களில் தான் அடிப்படை மருத்துவ வசதிகள் உள்ளன. 26 சதவீத கோர்ட்களில் பெண்களுக்கு என்று தனி கழிப்பறை வசதி கிடையாது...

நூலகங்கள்
அதேபோல, 16 சதவீத நீதிமன்றங்களில், ஆண்களுக்கு கழிப்பறை இல்லை... 50 சதவீத நீதிமன்றங்களில் லைப்ரரிகளும், 46 சதவீத நீதிமன்றங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படவே இல்லை. சுதந்திரத்துக்கு பின், பல்வேறு துறைகளில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன... அதுபோலவே, நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டமைப்புகளை, நவீனப்படுத்த வேண்டியது அவசியம். இந்திய சூழலுக்கு பொருத்தமாக அந்த நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்..

ஆணையம்
இதற்காக, தேசிய நீதித்துறை கட்டமைப்பு வாரியத்தை உருவாக்க வேண்டும்... மத்திய - மாநில அரசுகள் இணைந்து, இதை உருவாக்க வேண்டும்... வரும் குளிர்கால பார்லிமென்ட் தொடரில் தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு ஆணையத்தை கொண்டு வர வேண்டும்.. இது குறித்த திட்டத்தை மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளேன். இதற்கு விரைவில் நேர்மறையான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இது குறித்த நடவடிக்கைகளை அவர் விரைவுபடுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications