டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் துயரம்.. வழக்கறிஞர் தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது!
டெல்லி: டெல்லியின் புறநகரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய இடத்திற்கு அருகில் பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், விவசாயிகளுக்காக இன்று தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுளளது.
பஞ்சாபின் பாசில்கா மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத்தைச் சேர்ந்தவர் அமர்ஜித் சிங். இவர் திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இடம் அருகே இன்று விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ரோஹ்தக்கிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர் .
தற்கொலைக்கு என்ன காரணம் எனப்தை அமர்ஜித் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக "தனது உயிரைத் தியாகம் செய்கிறேன்". மக்களின் குரலை அரசு கட்டாயம் கேட்க வேண்டும்.

கருப்பு சட்டங்கள்
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற பொது மக்கள் மூன்று "கறுப்பு" விவசாய சட்டங்களால் "மோசடி" செய்யப்படுவகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி "மக்களின் குரலைக் கேட்க வேண்டும் என்றார்.

உறவினர்களிடம் விசாரணை
டிசம்பர் 18 தேதியிட்ட அந்த தற்கொலைக் குறிப்பின் நம்பகத்தன்மையை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இறந்தவரின் உறவினர்களுக்கு நாங்கள் தகவல் அளித்துள்ளோம், அவர்கள் இங்கு வந்ததும், அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும்" என்று ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

மத போதகர் தற்கொலை
ஏற்கனவே இரண்டு தற்கொலைகள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நடந்துள்ளது. 65 வயதான சீக்கிய போதகர் சாந்த் ராம் சிங், தற்கொலை செய்து கொண்டார். அடுத்த சி நாட்களுக்குப் பிறகு, டெல்லி எல்லைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு ஊர் திரும்பிய 22 வயதான விவசாயி பஞ்சாபின் பதிந்தாவில் தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய அரசு பேச்சு
கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பேச்சவார்ததை நடத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications