சீனா, அமெரிக்கா எல்லாம் ஓரம் போய் விளையாடுங்க! இந்தியா களமிறக்கும் புதிய ஜெட்.. எப்போ தெரியுமா?
டெல்லி: இந்திய விமானப்படைக்காக தயாரிக்கப்பட்ட 'எல்சிஏ மார்க் 1 ஏ' போர் விமானம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய விமானப்படைக்கு அடித்தளம் என்பது ரஷ்ய விமானங்கள்தான். ரஃபேல் விமானங்கள் எல்லாம் இப்போது வந்தவை. இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து தற்போதுவரை இந்திய விமானப்படையை தாங்கி பிடிக்கும் விமானங்கள் என்றால் அது ரஷ்ய படைப்புகள்தான். ஆனால் சோவியத் யூனியன் வீழ்ந்த பின்னர், ரஷ்ய-இந்திய ஆயுத பரிமாற்றத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

இருப்பினும் இதற்கு முன்னரே உஷாராக இந்தியா 1940ல் தனக்கென ஒரு பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்கியது. ஹெச்ஏஎல் என்பதுதான் அந்த நிறுவனம். இந்நிறுவனம் தற்போது சொந்தமான விமானங்களை உருவாக்க தொடங்கியுள்ளது. அப்படி உருவாக்கப்பட்டதுதான் 'எல்சிஏ மார்க் 1 ஏ' போர் விமானம். இந்த விமானத்தை உருவாக்குவதற்கான திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் முன்வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
முதல்கட்டமாக 83 விமானங்களை உருவாக்க ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முதல் பேட்ச் விமானங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வகை விமானங்கள் ஒற்றை என்ஜின் கொண்டது. 4000 கிலோ எடை கொண்ட இந்த விமானம் அதிகபட்சமாக 130000 கிலோ வரை எடையை எடுத்துக்கொண்டு பறக்க முடியும்.
இந்த விமானங்கள் ஒளியை விட 1.8 மடங்கு வேகத்தில் பயணிக்கும் தன்மை கொண்டதாகும். இந்த விமானத்தின் நோக்கம் மிக் 21, மிக் 23 மற்றும் மிக் 27 ஆகிய விமானங்களுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்றுதான் இது உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதால், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் இந்த திட்டம் பயன்படும்.
இந்திய விமானப்படையில் பல விமானங்கள் இருந்தாலும், எல்சிஏ மார்க் 1 ஏ முக்கிய பங்கு வகிக்கும், குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றிருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விமானம் ஜூலை மாதத்திற்குள் விமான படைக்கு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் என அழைக்கப்படும் தேஜஸ் ஒரு சூப்பர் சோனிக் விமானமாகும். ஒலியை விட வேகமாக பறக்கும் திறன் கொண்ட விமானங்களை சூபர்சோனிக் என்று கூறுவார்கள். 1984ம் ஆண்டு இந்த விமானத்தை உருவாக்கும் பணி தொடங்கியது. இந்த ஆண்டுதான் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியை (ADA) இந்திய அரசு தொடங்கியது. இதற்கு முன்னர் இருந்த மிக் 21 விமானத்தை தொடர்ந்து இது உருவாக்கப்பட்டது.
இலகு ரகத்தில், துல்லியமாக இலக்கை தாக்கிய அழிக்கும் ஆயுதங்களை ஏந்தி செல்லும் வகையில் தேஜஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தில் ஒற்றை இருக்கை கொண்ட விமானங்கள், இரட்டை இருக்கைகள் கொண்ட விமானங்கள் என இரண்டு வகைகள் இருக்கின்றன. பெரும்பாலும் ஒற்றை இருக்கை கொண்ட விமானங்கள் விமானப்படையினராலும், இரட்டை இருக்கை கொண்ட விமானங்கள் கடற்படையினராலும் இயக்கப்படுகிறது.
இது அளவில் சிறியதாக இருப்பதாலும், வெயிட் குறைவு என்பதாலும் எதிரியுடன் மோதும்போது உடனடியான திருப்பங்களை மேற்கொள்ளவும், பதில் தாக்குதல் கொடுக்கவும் இதனை வேகமாக இயக்க முடியும். கடந்த 2016ம் ஆண்டிலிருந்து இந்த விமானங்கள் நமது விமானப்படையில் இருக்கின்றன. தற்போது நம்மிடம் இருக்கும் மிக் 21 ரக விமானங்களை தேஜஸ் விமானங்களாக அப்கிரேட் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications