டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா முன்கள பணியாளர்களுக்கு போதிய அளவு 2வது டோஸ் வேக்சின் போடாதது.. கவலை தருகிறது.. மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உட்பட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா வேக்சின் இரண்டாவது டோஸ் போதிய அளவில் போடப்படாமல் இருப்பது பெரும் கவலை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மாற்றி உள்ளது. நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Less 2nd dose vaccination for frontline workers is the major concerns says Union Health ministry

இந்த நிலையில் புதிய வேக்சின் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்தும், வேக்சின் செயல்பாடுகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பாக உயர்மட்ட குழு கூட்டம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் நடத்தப்பட்டது. இந்த மீட்டிங்கிற்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமை தாங்கினார்.

இதில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் பேசுகையில், மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உட்பட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா வேக்சின் இரண்டாவது டோஸ் வேக்சின் வேகமாக போட வேண்டும். இவர்களுக்கு போதிய அளவில் போடப்படாமல் இருப்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.

இவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதன் மூலம் மட்டுமே கொரோனா தடுப்பு பணிகளை முறையாக கவனிக்க முடியும். வேக்சினை மக்களுக்கு செலுத்துவதில் தனியார் நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகளும் வேகமாக வேக்சினை கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்த வேண்டும். மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகள் போதிய அளவில் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை கூறியது.

வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 நாட்களுக்கு மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 நாட்களுக்கு மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

இதில் மாநில அரசுகள், கோவின் செயலில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர். மக்கள் கொடுக்கும் அடிப்படை தகவல்களை மாற்றும் வசதி, வேக்சின் போடும் தேதிகள், இடங்களில் மாற்றம் ஏற்பட்டால், அதை எளிதாக மாற்றும் வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்தும், ஆன்சைட் பதிவுமுறை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

English summary
Less 2nd dose vaccination for frontline workers is the major concerns says Union Health ministry in an high level meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X