கொரோனா இரண்டாம் அலை : மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
Recommended Video
கொரோனா அதிகம் பரவி வரும் 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை செய்ய உள்ளார். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கு மிகமிக தீவிரமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்றும் கொரோனா தொற்று காரணமாக ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

தமிழகம் உள்பட
இப்படி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருவதால், பொது இடங்களில் கொரோனாவைப் பரவாமல் தடுக்க கடுமையான நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்தும்படி அப்போது மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கேரளா, டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தரப்பிரேதசம், கர்நாடகா, குஜராத் மற்றும் பஞ்சாப் உள்பட 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

கட்டுப்பாடுகள் வரலாம்
பிரதமர் மோடியின் இந்த ஆலோசனைக்குப் பிறகு பல்வேறு முக்கிய ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதனிடையே மீண்டும் முழு ஊரடங்கு வரலாம் என்ற அச்சம் மகாராஷ்ரா மாநிலத்தில் நிலவுகிறது. இதேபோல் சத்தீஸ்கர் மற்றும் குஜராத் மாநிலத்திலும் காணப்படுகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முன்கூட்டிய ரயில்களில் ஏறி ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்,

ஐந்து மாநிலங்கள்
இதனிடையே டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள் இரவு 8 மணியளவில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் டெல்லி, சண்டிகர், அகமதாபாத், மும்பை, புனே, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேர வாழ்க்கை முடங்கி விட்டது.

அடுத்த 4 வாரங்கள்
இரவில் நடமாடும் வாகனங்களை போலீசார் தடுத்து வழக்கு போடுகிறார்கள். பொது இடங்களில் முக்ககவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. திருமண விழாக்கள், பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .என்றும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications