லோக்சபா தேர்தல்.. 3ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.. 64.66% வாக்குப்பதிவு!
லோக்சபா தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 116 தொகுதிகளில் இன்று நடந்தது.
டெல்லி: லோக்சபா தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 116 தொகுதிகளில் இன்று நடந்தது. இதில் 64.66% வாக்குகள் பதிவாகி உள்ளது.
நாடு முழுக்க முதல் இரண்டு கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று மூன்றாவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது.
முதல் இரண்டு கட்ட தேர்தலை போலவே இதிலும் வாக்குப்பதிவு சீரான வேகத்தில் நடந்தது. கேரளாவில் மக்கள் அதிகளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கு நடந்தது
கேரள மாநிலத்தில் 20 தொகுதிகள், குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் உள்ள 2 தொகுதிகள், கர்நாடகத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 5 தொகுதிகள், அசாமில் 4 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஷ்கர் மாநிலத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

வேறு எங்கு
அதேபோல் ஒடிசாவில் 6 தொகுதிகள். இதில் ஒடிசா சட்டசபை தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடந்தது. உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், காஷ்மீரில் 1 தொகுதி, திரிபுராவில் 1 தொகுதியில் தேர்தல் நடந்தது. இதில் மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட இடங்களில் சில பகுதிகளில் கலவரம் நடந்தது.

என்ன கோளாறு
பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது. அதேபோல் கேரளாவில் மழை காரணமாக சில இடங்களில் வாக்குப்பதிவு தடைபட்டது.மேற்கு வங்கத்தில் கலவரம் காரணமாக சில இடங்களில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

சதவிகிதம் என்ன
3ம் கட்ட தேர்தலில் இதில் 64.66% வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநில வாரியான வாக்குப்பதிவு சதவிகிதம் பின்வருமாறு:
அசாம்- 78.29% , பீகார்- 59.97% , கோவா- 71.09% , குஜராத்- 60.21%, ஜம்மு & காஷ்மீர்- 12.86%, கர்நாடகா - 64.14%, கேரளா- 70.21%, மஹாராஷ்டிரா- 56.57%, ஒடிசா- 58.18%, திரிபுரா- 78.52%, உத்தர பிரதேசம்- 57.74%, மேற்கு வங்கம் - 79.36, சட்டீஸ்கர்- 65.91%, தத்ரா& நாகர் - 71.43% மற்றும் டாமன் & டையூ- 65.34%. வாக்குகள் பதிவானது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications