மக்களே வாக்களிக்காம விட்டுறாதீங்க.. முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு மோடி உருக்கமான வேண்டுகோள்
Recommended Video

டெல்லி: இளம் மற்றும் முதல் தலைமுறையினர் தவறாது வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் இன்று தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக நாடு முழுவதும் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இதேபோல் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கியவேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் திரளாக வந்து வாக்களியுங்கள். இளம் மற்றும் முதல் தலைமுறையினர் தவறாது வாக்களிக்க வேண்டும் என்றும் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.











Click it and Unblock the Notifications