‛மீண்டும் வாரணாசி’.. அறிவிப்பு வந்ததும் பிரதமர் மோடியின் முதல் ரியாக்சன் இதுதான்! கொண்டாடும் பாஜக
டெல்லி: பிரதமர் மோடி 3வது முறையாக உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் 2 முக்கிய பதிவுகளை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. டெல்லி பாஜக அலுவலகத்தில் பாஜகவின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இந்தியா முழுவதும் மொத்தம் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 47 இளைஞர்களுக்கும், 28 பெண்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அங்கு மொத்தம் 80 தொகுதிகள் உள்ள நிலையில் 51 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் தான் பிரதமர் மோடி. அதாவது பிரதமர் மோடி தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் பரவின.
ஆனால் இன்று வெளியான பட்டியலில் பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களில் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமரான நிலையில் 3வது முறையாக அவர் அங்கு வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் 2 முக்கிய பதிவுகளை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல் பதிவில், ‛‛பாஜகவின் தன்னலமற்ற கோடிக்கணக்கான கட்சியின் காரியகர்த்தர்களுக்கும், அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நான் தலைவணங்கி நன்றி கூறுகிறேன். மூன்றாவது முறையாக காசியில்(வாரணாசி) உள்ள என் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
2014ல் மக்களின் கனவுகளை நிறைவேற்றவும், ஏழை எளிய மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் நான் காசிக்கு சென்றேன். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் அடைந்து, சிறந்த காசியை உருவாக்க பணியாற்றியுள்ளோம். இந்த முயற்சிகள் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும். நான் பெரிதும் மதிக்கும் காசி மக்களின் ஆசீர்வாதங்களுக்காக அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிரதமர் மோடி தனது 2வது பதிவில், ‛‛ நமது கட்சி சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு வரும் நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. கட்சி சார்பில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நமது நல்லாட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நல்ல திட்டங்களின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்ல உள்ளோம். மேலும் முன்னேற்றத்துக்கான பலன்களை ஏழை எளிய மக்களிடம் கொண்டு செல்ல உறுதி செய்து வருகிறோம். இந்தியாவி்ல 140 கோடி மக்கள் மீண்டும் நம்மை ஆசீர்வாதிப்பார்கள் எனவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி விக்சித் பாரதத்தை உருவாக்க இன்னும் பலத்தை தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications