முதல் இரு கட்ட லோக்சபா தேர்தலில் வாக்கு சதவீதம் என்ன? முந்துமா 3ஆவது கட்டம்!
டெல்லி: 18 ஆவது லோக்சபா தேர்தலில் இன்று 3 ஆவது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் முதல் இரண்டு கட்ட தேர்தல்களில் வாக்கு சதவீதம் எத்தனை?
லோக்சபாவுக்கு 7 கட்டங்களாக அதாவது ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதன் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது.

தமிழகத்தில் முதல் கட்ட லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் நடந்து முடிந்தது. முதல் கட்ட தேர்தலில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 102 லோக்சபா தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.
முதல் இரண்டு கட்ட தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிட்டது. அதன் படி ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண் வாக்காளர்கள் 66.22 சதவீதம், பெண் வாக்காளர்கள் 66.07 சதவீதம். மூன்றாம் பாலினத்தவர்கள் 31.32 சதவீதம் ஆகும்.
அது போல் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் 66.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆண் வாக்காளர்கள் 66.9 சதவீதம், பெண் வாக்காளர்கள் 66.42 சதவீதம், மூன்றாம் பாலினத்தவர் 23.86 சதவீதம் பேர் ஆவர்.
முதல் கட்ட வாக்குப் பதிவில் லட்சத்தீவில் அதிகபட்சமாக 84.16 சதவீதம் வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக பீகாரில் 49.26 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அது போல் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் போது மணிப்பூரில் அதிகபட்சமாக 84.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 55.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலின் முதல், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் போது பதிவான வாக்குகளின் சதவீதம் சற்று குறைந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் முதல் கட்ட வாக்குப் பதிவில் 69.43 சதவீதமும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 69.17 சதவீதமும் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் 3ஆவது கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான பிரச்சாரம் கடந்த 5 ஆம் தேதியுடன் ஓய்ந்தது.10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின் 93 தொகுதிகளில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு சதவீதத்தில் முதல் இரு கட்டங்களை 3ஆவது கட்ட தேர்தல் முந்துமா என்பதை பார்க்கலாம்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 93 தொகுதிகளில் 79 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது. காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களை மட்டுமே பெற்றது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications