மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல்.. ஜார்க்கண்டில் 2 கட்டமாக நடக்கிறது.. தேர்தல் ஆணையம்
டெல்லி: ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதேபோன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 10 மற்றும் நவம்பர் 20 ஆம் தேதி என இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் நவம்பர் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் நவ.13-ல் நடக்கிறது.
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே அதற்குள் அங்கு சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அவசியம் ஆகும். எனவே தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இரு மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாலை 3.30 மணிக்க்கு செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறியதாவது:- மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளில் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. நவம்பர் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இதேபோன்று ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நவ.13 ஆம் தேதி நடைபெறும். 2-வது கட்ட தேர்தல் நவ.20 ஆம் தேதி நடைபெறும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந் தேதி நடைபெறும். மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் இருமாநில சட்டமன்றதேர்தல் வாக்குகளும் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வயநாடு, அமேதி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக உள்ள வயநாடு லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வயநாடு லோக்சபா தொகுதியில் வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் தற்போது ஏகநாத் ஷிண்டேவின் சிவசெனா பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து பாஜக கூட்டணியை வீழ்த்த ஆயத்தமாகி வருகின்றன. அதேபோல, ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியாக உள்ள பாஜக ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியை பிடித்தது. ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி வென்றது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் மொத்த இடங்கள் 81. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 41. ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் தற்போது, ஜார்க்கண்ட் முக்தி மோச்சா, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் வென்றுள்ளது. பாஜகவிற்கு 26 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். .
மகாராஷ்டிரா மாநில சட்டசபை பதவிக் காலம் நவம்பர் 26 ஆம் தேதியும், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பதவிக் காலம் டிசம்பர் 29 ஆம் தேதியும் முடிவடைகிறது. எனவே, நவம்பர் 2 வது அல்லது 3 வது வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் தற்போது, பாஜக - 102, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ்- 40 மற்றும் ஏக்நாத் ஷிண்டேசிவசேனா- 38 ஆகிய பலத்துடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்கும் மகா விகாஸ் கூட்டணியின் பலம் என்று பார்த்தால் காங்கிரஸ் - 44, உத்தவ் தாக்கரே சிவசேனா - 16, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 12 என மொத்தம் 72 ஆக உள்ளது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. தற்பொது சிவசேனாவின் சின்னம் மற்றும் பெயர் ஆகியவை ஏக்நாதத் ஷிண்டே வசமே உள்ளன.
அதே போல, அஜித்பவார் வசமே தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உள்ளது. பாஜக தனது பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி கட்சிகளை உடைத்ததாக உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த தேர்தலில் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்டுவோம் எனவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எனவே மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்பட உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications