99% ஓவர்.. ரேஷன் அட்டைகள் குறித்து மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்.. ஆஹா மொத்தமாக மாறிடுச்சே!
ஆதார் கார்டு இப்போது இந்தியாவில் அடிப்படை அடையாள அட்டையாக மாறிவிட்டது.
டெல்லி: ரேஷன் அட்டைகள் தொடர்பாக மத்திய அரசு முக்கியமான தகவல் ஒன்று வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க ரேஷனில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிகளை மனதில் வைத்து ரேஷன் பொருட்கள் வாங்குவதை எளிதாக்கும் விதமாக வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.
முக்கியமாக ரேஷன் துறை முடிந்த அளவு டிஜிட்டல் மயமாக மாற்றப்பட்டு வருகிறது. உதாரணமாக எஸ். எம். எஸ் மூலமாக பில் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ரேஷன் பொருட்கள்
அதாவது ரேஷன் பொருட்களை வாங்கியவர்களுக்கு எஸ். எம். எஸ் மூலமாக அவர்கள் இணைத்து இருக்கும் போன் எண்ணுக்கு என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டது என்று உறுதி செய்வதற்காக பில் அனுப்பப்படும். ரேஷன் பொருட்கள் திருடு போவதை தடுக்க இப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதாரணமாக நீங்கள் ரேஷனில் போய் சர்க்கரை வாங்குகிறீர்கள். மற்ற பொருட்கள் எதுவும் வாங்கவில்லை. இதையடுத்து நீங்கள் சர்க்கரை வாங்கியதற்கான பில் உங்களுக்கு வரும். போனில் நீங்கள் எவ்வளவு சர்க்கரை வாங்கினீர்கள் என்ற விவரம் இருக்கும். நீங்கள் வாங்காத பொருட்கள் அதில் இருந்தால் நீங்கள் புகார் கொடுக்க முடியும்.

டிஜிட்டல்
முக்கியமாக எஸ். எம். எஸ் மூலமாக பில் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது ரேஷன் பொருட்களை வாங்கியவர்களுக்கு எஸ். எம். எஸ் மூலமாக அவர்கள் இணைத்து இருக்கும் போன் எண்ணுக்கு என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டது என்று உறுதி செய்வதற்காக பில் அனுப்பப்படும். இது போல ரேஷன் பணிகள் பலவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் ரேஷன் அட்டைகள் தொடர்பாக மத்திய அரசு முக்கியமான தகவல் ஒன்று வெளியிட்டு உள்ளது. அதன்படி ரேஷன் அட்டைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

100%
அதன்படி இந்தியாவில் ரேஷன் கார்டுகள் 100% டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதாவது எல்லா ரேஷன் அட்டைகளும் டிஜிட்டல் அட்டைகளாக மாற்றப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாட்டில் 19 கோடியே 72 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இவை எல்லாம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். 99% ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 1 சதவிகிதமும் விரைவில் இணைக்கப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது,

மத்திய அரசு
ஆதார் கார்டு இப்போது இந்தியாவில் அடிப்படை அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல துறைகளில் சேவைகளை பெற ஆதார் கார்டு அவசியம் ஆகிவிட்டது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது. மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் ரேஷன் அட்டைகளை ஆதாருடன் 99 சதவிகிதம் இணைத்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications