'தங்க மகன்' நீரஜ் சோப்ரா உட்பட 12 பேருக்கு.. தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிப்பு
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி உட்பட 7 பதங்களை வென்றது. ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

அதேபோல பாராலிம்பிக் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் வீராங்கனைகள் 5 தங்கம், 8 வெள்ளி உட்பட 19 பதக்கங்களை இந்தியாவிற்காகப் பெற்றுத் தந்தனர்.
விளையாட்டுத் துறையில் உயரிய சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா விருது வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு தயான் சந்த் கேல் ரத்னா விருது பெறுவார் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 12 பேருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற ரவிக்குமார், குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ. 13ஆம் தேதியில் டெல்லியில் நடைபெறும் விழாவில் 12 வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அதேபோல 35 வீரர் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவர்கள்
1 நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்)
2 ரவிக்குமார் (மல்யுத்தம்)
3 லவ்லினா (குத்துச்சண்டை)
4. ஸ்ரீஜேஷ் (ஹாக்கி)
5. அவானி லெக்ரா (பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச்சூடு)
6. சுமித் ஆன்டில் (பாரா ஒலிம்பிக் தடகளம்)
7. பிரமோத் பகத் (பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்)
8. கிருஷ்ணா நகர் (பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்)
9. மணீஷ் நர்வால் (பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சூடு)
10 மிதாலி ராஜ் (கிரிக்கெட்)
11. சுனில் சேத்ரி (கால்பந்து)
12. மன்பிரீத் சிங் (ஹாக்கி)












Click it and Unblock the Notifications