ஆகஸ்ட் 15க்கு முன்.. டெல்லியில் தீவிரவாதிகள் டிரோன் அட்டாக் நடத்த வாய்ப்பு.. போலீசாருக்கு எச்சரிக்கை
டெல்லி: ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன் தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு தற்போது டிரோன் தாக்குதல்கள் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது.
ரிமோட் மூலம் இயக்கப்படும் டிரோன்கள் மூலம் ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஜம்மு
அதன்பின் மீண்டும் ஜம்மு காஷ்மீரில் இரண்டு முறை டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிகள் செய்யப்பட்டது. ராணுவத்தின் தீவிர கண்காணிப்பு காரணமாக இந்த முயற்சிகள் தடுக்கப்பட்டன. இந்த தாக்குதல்கள் மிகவும் புத்திசாலித்தனமாக நடத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நவீன ரக டிரோன்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

நவீன டிரோன்
30 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கூட இந்த டிரோன்களை இயக்க முடியும். வெடிகுண்டை குறிப்பிட்ட இடத்தில் வீசிவிட்டு, ரேடாரில் சிக்காமல் மீண்டும் திரும்பி செல்லும் திறன் கொண்டதாக இந்த டிரோன் உள்ளது என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி வல்லுநர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எப்படி
இந்த நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன் தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் இதேபோல் டிரோன் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு முன் டெல்லியில் டிரோன் நடக்கலாம், கவனமாக இருங்கள் என்று டெல்லி போலீசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
கடந்த சில நாட்களுக்கு முன் அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட 2 தீவிரவாதிகள் லக்னோவில் கைது செய்யப்பட்டனர். அன்சார் காஸ்வாதுல் ஹிண்ட் என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரத்தினத்தன்று உ.பியில் இவர்கள் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது டெல்லியிலும் தீவிரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications