Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“வாஸ்கோடகாமாவே 11 மாசத்துல இந்தியா வந்துட்டாரு.. மணிப்பூர் போக மோடிக்கு 2 வருசமா?” - கார்கே கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் புதிய நிலப்பரப்புகளை தேடி அலைந்த வாஸ்கோடகாமா கூட, 11 மாசத்துல இந்தியாவை கண்டுபிடித்து வந்துவிட்டார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் போக 2 வருடம் ஆகிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்திருக்கிறார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கைகளை சரமாரியாக விமர்சித்தார்.

Mallikarjun Kharge Manipur Speech

2 ஆண்டுகள் ஏன்?

பிரதமர் டெல்லியில் இருந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல 2 ஆண்டுகள் ஆனது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார். அதேசமயம் 15 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கல்லில் இருந்து இந்தியாவுக்கு வாஸ்கோடகாமா 11 மாதங்களில் வந்து சேர்ந்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.

"வாஸ்கோடகாமாவும் கிறிஸ்டோபர் கொலம்பஸும் ஒரு புதிய உலகைக் கண்டுபிடிக்க முறையே 11 மாதங்களும், 2 மாதங்களும் எடுத்துக் கொண்டனர். ஆனால், நமது பிரதமர் டெல்லியில் இருந்து மணிப்பூருக்குச் செல்ல 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இந்தியா மீதான உங்கள் அக்கறையை இப்படியா வெளிப்படுத்துவீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். மணிப்பூர் பற்றி எறிந்தபோது அரசு மவுனம் காத்தது என்றும் குற்றம் சாட்டினார்.

மணிப்பூர் நிலைமை

"இரு சமூகங்களுக்கிடையே நடந்த இன வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 70,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர். நீங்கள் மணிப்பூரை ராணுவமயமாக்கப்பட்ட பகுதியாக மாற்றிவிட்டீர்கள்" என்று கார்கே குற்றம்சாட்டினார். எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

வாஸ்கோடகாமா

வரலாற்று ரீதியாக பார்த்தால், வாஸ்கோடகாமா கடல் வழித் தடத்தைப் பற்றி அறியாத நிலையிலும், ஆப்பிரிக்கா வழியாக போர்ச்சுகல்லில் இருந்து இந்தியாவுக்குச் செல்ல சுமார் 11 மாதங்கள் ஆனதை அவர் நினைவூட்டினார். அதேபோல், கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினில் இருந்து வட அமெரிக்காவுக்குச் செல்ல 2 மாதங்கள் மட்டுமே ஆனது என்பதையும் தனக்குத் தெரிந்த உதாரணங்களாக கார்கே எடுத்துரைத்தார்.

மணிப்பூரில் மீண்டும் முதலமைச்சர் ஆட்சி

மல்லிகார்ஜுன கார்கே தனது உரையை ஆற்றிவந்த நிலையில், மணிப்பூரில் விதிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக நீக்குவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சட்டமன்றக் கட்சித் தலைவர் ஒய். கெம்சந்த் சிங் மணிப்பூரின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. கெம்சந்த் சிங் அன்று மாலை 6 மணிக்கு பதவியேற்றார்.

மணிப்பூர் சட்டமன்றம்

மணிப்பூரில் பிப்ரவரி 13, 2025 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 9 அன்று, மைதேயி மற்றும் குகி சமூகங்களுக்கிடையே பல மாதங்களாக நீடித்த இன வன்முறையைத் தொடர்ந்து, அப்போதைய பாஜக தலைமையிலான முதல்வர் பிரேன் சிங் அரசு பதவி விலகியதால் குடியரசுத் தலைவர் ஆட்சி விதிக்கப்பட்டது. 2027 வரை பதவிக்காலம் கொண்ட 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் நிறுத்திவைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட அறிவிக்கையில், "அரசியலமைப்பின் 356வது பிரிவின் (2) பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நான், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிப்ரவரி 13, 2025 அன்று எனது கீழ் பிறப்பிக்கப்பட்ட பிரகடனத்தை பிப்ரவரி 4, 2026 முதல் மணிப்பூர் மாநில தொடர்பாக ரத்து செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+