இன்ஸ்டாகிராம் இருக்கா? 1.75 கோடி பேரின் தகவல்களை திருடிய ஹேக்கர்கள்.. அக்கவுண்ட்டை பாதுகாப்பது எப்படி?
டெல்லி: பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 1.75 கோடி பேரின் கணக்குகளில் இருந்து அவர்களின் முக்கியமான விவரங்களை ஹேக்கர்கள் திருடி உள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான மால்வேர்பைட்ஸ் அறிவித்துள்ளது. இதனால் பலரும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம். அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி? என்பது பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான மால்வேர்பைட்ஸ் கூறியுள்ளதாவது: 1.75 கோடி (17.5 மில்லியன்) இன்ஸ்டாகிராம் கணக்குகளிலிருந்து முக்கியமான தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் தற்போது ஹேக்கர் தளங்களில் பரவி வருகிறது. இதனால் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் ஃபிஷிங் தாக்குதல்கள், ஆள்மாறாட்டம், ஹேக்கிங் உள்ளிட்ட பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும். கசிந்த தகவல்களில்பயனர்களின் பெயர்கள், இ-மெயில், செல்போன் எண், முகவரி உள்பட பல சுயவிவரங்கள் அடங்கும். எங்கள் நிறுவனத்தின் டார்க்வெப் கண்காணிப்பின்போது இது கண்டறியப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுபற்றி இன்னும் இன்ஸ்டாகிராம் அல்லது அதன் தாய் நிறுவனமான மெட்டா சார்பில் எந்த பயனர்களின் தகவல்கள் கசிந்தது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே தான் உங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அல்லது ஹேக்கிங் அபாயம் இருப்பதாக நினைத்தால் கீழே உள்ளவற்றை பயன்படுத்தி பாதுகாத்து கொள்ளலாம்.
* அதன்படி [email protected]ல் இருந்து உங்களின் அக்கவுண்ட் மாற்றம் செய்வது குறித்து ஏதாவது இ-மெயில் வந்திருந்தால் அதில் "Secure my account" (என் கணக்கைப் பாதுகாக்கவும்) என்பதைத் தேர்வு செய்து மாற்றங்களை செய்து அக்கவுண்ட்டை பாதுகாக்கலாம்.
* இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை லாக்அவுட் செய்து மீண்டும் திறக்க வேண்டும். அப்போது Forgotten Password என்பதை கிளிக் செய்து நம் இன்ஸ்டாகிராம் பெயர், இ-மெயில் அல்லது செல்போன் எண்ணை கொடுத்து Captcha கிளிக் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இன்ஸ்டாகிராம் ஹேல்ப் பேஸை அணுகி மீண்டும் ஓபன் செய்யலாம்.
* இல்லாவிட்டால் உங்களின் பாஸ்வேர்ட்டை உடனடியாக மாற்ற செய்ய வேண்டும். 2 factor Authentication முறையை பின்பற்றலாம். செல்போன் எண் - இ-மெயில் முகவரி சரியானதா? என உறுதிப்படுத்தி கொள்ளலாம். அதேபோல் சந்தேகத்திற்கிடமான பிற செயலிகளை இன்ஸ்டாகிராம் சார்ந்த பயன்பாட்டுக்கு யூஸ் செய்யாமல் இருக்க வேண்டும்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications