பஹல்காம் தாக்குதல்.. பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் வெட்டி கொண்டாட்டமா? கேக் உடன் சென்றவரால் ஷாக்
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்குள் இன்று ஊழியர் ஒருவர் கேக் கொண்டு சென்றதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணத்திற்காக இன்று அவர் கேக் கொண்டு சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். நேற்று முன் தினம் நடந்த இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை மூட மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.

எதற்காக கேக் கொண்டு சென்றார்?
இந்த நிலையில் இன்று காலை பாகிஸ்தான் தூதரகத்திற்குள் அதிகாரி ஒருவர் கேக் கொண்டு சென்றதாக தகவல் பரவி வருகிறது. அவரிடம் செய்தியாளர்கள் என்ன காரணத்திற்காக கேக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் எந்த வித பதிலும் சொல்லாமல் கேக்கை உள்ளே கொண்டு சென்றுவிட்டார் என்றும் இது தொடர்பான வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்திற்கு, அந்த நாட்டின் அதிகாரி ஒருவர் கேக் கொண்டு செல்லும் காணொலி வீடியோ வெளியாகி இருக்கிறது. ஒட்டு மொத்த நாடும் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்துள்ள சூழலில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி என்ன காரணத்திற்காக கேக் எடுத்து சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பதில் அளிக்காமல் சென்ற அதிகாரி
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை மூட நேற்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதன் காரணமாக செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தான் தூதரகம் முன்பு செய்தியாளர்கள் நின்றிருந்தனர். அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் கேக் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். இதை பார்த்ததும் செய்தியாளர்கள் இது பற்றி அதிகாரியுடன் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார். இந்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதரகத்தில் இருக்கக் கூடிய தரைப்படை, வான் படை, கடற்படை பிரிவை சேர்ந்த வீரர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்தது. பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரை இங்கு தூதரகம் வைத்திருப்பதால் எந்த பலனும் கிடையாது. தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று வெளியுறவுத் துறை செயலாளர் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் எதற்காக அவர் கேக் கொண்டு சென்றார் என்ற கேள்வி எழுந்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
And cakes are being (ordered?) delivered to the Pak High Commission today in New Delhi. pic.twitter.com/6wFBDElYC1
— Rahul Shivshankar (@RShivshankar) April 24, 2025
குற்றவாளிகள் தப்ப முடியாது
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசாரன் புல்மேடு சுற்றுலா தலத்தில் திடீரென பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடில் அப்பாவி மக்கள் 26 பேர் பலியாகினர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 12 பேர் காயமடைந்தர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த கொடூர தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் 'தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.
இதற்கிடையே இந்த அமைப்புக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் கூறியது. அதே நேரத்தில் பயங்கரவாத சம்பவத்துக்கு பாரதம் ஒரு போதும் துணை போகாது என்றும், குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். இதற்கிடையே தான் பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சிந்து நதிக்கான ஒப்பந்தம் ரத்து, தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
-
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications