எல்லாமே வரம்.. "வந்த லட்சம் பேரில் ஷ்ரவனும் ஒருத்தர்".. ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ
டெல்லி: வயதான தாய், தந்தையை தனது தோளில் சுமந்து செல்லும் இளைஞரின் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
Recommended Video
அன்றெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இருந்தன. ஒரே வீட்டில் 2, 3 தலைமுறையினர் கூட வசித்து வந்தார். ஏதோ விஷேசத்திற்கு சமைப்பது போல் சமையல் நடக்கும். ஆனால் இந்த பழக்கம் நாளாக நாளாக குறைந்துவிட்டது.
தங்களுக்கு ஆதாயம் இருந்தால் மட்டுமே பெற்றோரை வைத்துக் கொள்வது என்ற முடிவிற்கு சில மகன்களும் மகள்களும் வந்துவிட்டனர். தாங்கள் வேலைக்குச் செல்லும் போது குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும் வீட்டை பார்த்துக் கொள்ளவும் மட்டுமே இன்று பெரியோரை நாடும் நிலை உள்ளது.

வழிபாட்டு தலம்
வயதான காலத்தில் தாங்கள் விரும்பும் வழிபாட்டு தலத்திற்கு செல்ல விரும்பி நீண்ட காலமாக அதை மகனிடமோ மகளிடமோ கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர்களின் மனம் இறங்காது. "வயதான காலத்தில் உங்களை அழைத்துச் சென்று ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு, அதெல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது" என ஒரே போடாக போட்டுவிடுகிறார்கள்.

தாய்- தந்தை
இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் இளைஞர் ஷ்ரவன் குமார் தனது தாய், தந்தையை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ளும் சம்பவம் தீயாய் பரவி வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கான்வார் யாத்திரையை பார்க்க அந்த இளைஞரின் பெற்றோர் விரும்பினர்.

வயது முதிர்வு
ஆனால் வயது முதிர்வு காரணமாக இருவராலும் நடக்க முடியாத நிலை. என்ன செய்வது என யோசித்த அந்த இளைஞர் தனது தாய் தந்தையை டோலி போல் இருபுறமும் கட்டி தூக்கி செல்ல ஆயத்தமானார். வலது பக்கம் தனது தாயையும் இடது பக்கம் தனது தந்தையையும் அமர வைத்து வெறுங்காலில் சுமந்தபடி வந்தார்.

பாராட்டு
அவரை பார்த்த பலர் நேரடியாக சென்று பாராட்டியும் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு பலரை பாராட்டச் செய்யவும் வைத்தனர். அந்த வகையில் இந்த வீடியோவை உத்தரகண்ட் மாநில டிஜிபி அசோக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வயதான பெற்றோர்
அதில் அவர் குறிப்பிடுகையில் இப்போதெல்லாம் வயதான பெற்றோர்கள் வெறுக்கப்படுகிறார்கள். வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். ஆனால் இன்று பார்த்த காட்சிகள் அதற்கு நேர் எதிராக இருந்தது. கான்வார் யாத்திரைக்கு வந்த சிவ பக்தர்களில் ஷ்ரவன் குமார் எனும் இளைஞரும் ஒருவர். அவரது தனது பெற்றோரை தோளில் சுமந்து வந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு எனது மதிப்பும் மரியாதையும் என கூறியிருந்தார். ஷ்ரவன் குமாரை போல் இன்னொரு இளைஞர் தனது பார்வையற்ற தாயை தோளில் சுமந்து கொண்டு வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் காட்சிகளும் சமூகவலைதளங்களில் தீயாய் பரவியது.












Click it and Unblock the Notifications