பயங்கரவாதிகளுக்கு உணவு கொடுத்து உதவிய நபர்! போலீசாரிடம் சிக்கியதும் செய்த காரியம்.. ஷாக் வீடியோ
காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு உதவியதாக பிடிபட்டவர் போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆகி தப்பி ஓடிய போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு படை வீரர் ஒருவர் எடுத்த அந்த வீடியோவில், பாறைகள் நிறைந்த அந்த ஆற்றில், பிடிபட்ட நபர் திடீரென குதித்து தப்ப முயல்வது, நீச்சல் அடித்து வெளியெற முடியாமல் ஆற்றில் அடித்து செல்லப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் கொடுத்து உணவு வழங்கிய நபரை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

நீச்சல் அடிக்க முடியாமல்
அவரது பெயர் இம்தியாஸ் அகமது என்பதும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ஸ்லீப்பர் செல் ஆக அவர் செயல்பட்டு இருக்கலாம் என்று பாதுகபபு படையினர் சந்தேகித்தனர். அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற போது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை காட்டுவதாக கூறிய அகமது, பாதுகாப்பு படையினரிடம் எஸ்கேப் ஆக முயற்சித்து நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "கடந்த 23 ஆம் தேதி இம்தியாசின் பங்களிப்பு விசாரணையில் கண்டறியப்பட்டது. லஷ்கர் பயங்கரவாதிகளின் மறைவிடம் குறித்து தனக்கு தெரியும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். மறைவிடத்தை காட்டுவதாக அவர் அழைத்து சென்றார். அந்த நேரத்தில் திடீரென வைஷோவ் ஆற்றில் குதித்து நீந்தி தப்ப முயன்றார். ஆனால், ஆற்று நீரின் வேகத்தில் அவர் அடித்து செல்லப்பட்டார்" என்றனர்.
குற்றச்சாட்டுக்கு மத்தியில் வீடியோ
இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர் ஒருவர் எடுத்த அந்த வீடியோவில், பாறைகள் நிறைந்த அந்த ஆற்றில், இம்தியாஸ் அகமது திடீரென குதித்து தப்ப முயல்வது, நீச்சல் அடித்து வெளியெற முடியாமல் ஆற்றில் அடித்து செல்லப்படும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இம்தியாஸ் அகமதுவின் குடும்பத்தினர், பாதுகாப்பு படையினரரின் காவலில் வைத்து அவர் கொல்லப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த வீடியோ வெளியாகியுள்ளது. முன்னதாக, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் இம்தியாஸ் அகமது மக்ரே உயிரிழந்த விவகாரத்தில், சதி இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
தனது எக்ஸ் தளத்தில் மெகபூபா முப்தி வெளியிட்டு இருந்த பதிவில், "குல்காமில் மேலும் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக ராணுவத்தினர் தான் இம்தியாஸ் மக்ரேவை பிடித்து சென்றதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். ஆனால் தற்போது மர்மமான முறையில், அவரது உடல் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க உதவியதாக பிடிபடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இத்தகைய குற்றச்சாட்டின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications