பாகிஸ்தானை மதிக்கணும்.. இல்லைனா நம் மீது அணுகுண்டை வீசிவிடுவார்கள்! சர்ச்சை கிளப்பிய மணிசங்கர் ஐயர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானை மதிக்கவில்லை என்றால் அவர்கள் இந்தியா மீது அணுக்குண்டைப் போட்டுவிடுவார்கள் என்று மணிசங்கர் ஐயர் நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், காங்கிரஸ் சார்பில் இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மிகத் தீவிரமான பிரச்சாரம் நடந்து வருகிறது.

Mani Shankar Aiyar says Respect Pakistan or they ll drop atom bomb Congress s immediate response


அப்போது திடீர் திடீரென இணையத்தில் தலைவர்களின் சில சர்ச்சை பேச்சுகளும் பரவி வருகிறது. அப்படிதான் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் பற்றிக் கூறிய கருத்துகள் இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சர்ச்சை கருத்து: அதாவது இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அதன் ராணுவ வலிமையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் கூறியுள்ளார். இல்லையென்றால் இந்தியா மீது பாகிஸ்தான் அணுக்குண்டை வீச வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

சமீப நாட்களில் பாகிஸ்தானின் அணுசக்தி திறன் குறித்து எச்சரித்த இரண்டாவது தலைவர் மணிசங்கர் அய்யர் ஆவர். முன்னதாக இந்த வாரம் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா இதே போன்ற ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அதாவது பாகிஸ்தானைச் சீண்டினால் அவர்கள் அணுக்குண்டுகளைப் பயன்படுத்த முடியும் என்று கூறியிருந்தார்.

"பயந்துவிட்டீர்களா மோடி".. அம்பானி- அதானி வீட்டுக்கு ED அனுப்புங்களேன்.. ராகுல் காந்தி பளீர் பதிலடி


மரியாதை:
இந்தியா-பாகிஸ்தான் இடைய சுமுகமான உறவு இருக்க வேண்டும் என்பதை நீண்ட காலமாகவே மணிசங்கர் ஐயர் வலியுறுத்தி வருகிறார். அதாவது இந்தியா தேவைப்பட்டால் பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளை தெரிவிக்கலாம் என்ற போதிலும் அண்டை நாட்டை மதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மதிக்கவில்லை என்றால், அதற்கு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

அணுகுண்டு:
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர்களிடம் (பாகிஸ்தான்) அணுகுண்டுகள் உள்ளன. நம்மிடம் அணுகுண்டுகள் உள்ளன.. ஆனால் லாகூரில் ஒரு குண்டு வீசலாம் என்று பைத்தியக்காரத்தனமான முடிவை யாராவது எடுத்தால் பதிலுக்கு அவர்கள் நம் மீது அணு குண்டை வீச 8 நொடிகள் கூட ஆகாது. நாம் அவர்களை மதித்தால், அவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால் நாம் அவர்களை மதிக்கவில்லை என்றால்.. அதற்குப் பதில் அவர்கள் இந்தியா மீது குண்டுகளை வீச முடிவு செய்தால் என்ன ஆகும்?" என்று சாடினார்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சித்த மணிசங்கர் ஐயர், "பாகிஸ்தானுடனான நமது பிரச்சினைகள் எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும் கூட, ஒருவர் விஷ்வகுருவாக மாற நினைத்தால் அந்த பிரச்சினைகளைத் தீர்க்க கடினமாக உழைக்கிறோம் என்பதைக் காட்டி இருக்க வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில். இந்த விவகாரத்தில் எதுவுமே நடக்கவில்லை" என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் விளக்கம்:
பாகிஸ்தானை மதிக்கவில்லை என்றால் இந்தியா மீது அவர்கள் அணுகுண்டை வீசலாம் என்று மணிசங்கர் ஐயர் கூறியது சர்ச்சையானது. இதையடுத்து உடனடியாக இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்று அக்கட்சி சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் காங்கிரஸின் பவன் கேரா, "பிரதமர் மோடியின் தோல்விகளை மறைக்கவும் மக்கள் கவனத்தைத் திசை திருப்பவும் பாஜக முயன்று வருகிறது. அதன் ஒரு முயற்சியாகவே சில மாதங்களுக்கு முன்பு மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டியின் சில பகுதிகளை மட்டும் வெட்டி, அதை பாஜகவினர் இப்போது இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும், அவரது கருத்துகள் கட்சியின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை. அது அவரது சொந்த கருத்துகள். அவர் கட்சியின் சார்பில் பேசவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+