Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதானிக்காக மோடி போராடுராரு.. ராகுலுக்காக காங்கிரஸ் கட்சி "அப்படியெல்லாம்" போராடாது! மாணிக்கம் தாகூர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பணக்காரர் அதானிக்காக பிரதமர் மோடி எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு உதாரணம்தான் ராகுல்காந்தியின் பதவி பறிப்பு என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து விருதுநகர் எம்பியும் காங்கிரஸ் நிர்வாகியுமான மாணிக்கம் தாகூர் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் கேள்வி பதில் வடிவம் இதோ:

கேள்வி: நாடாளுமன்றம் தொடங்கி. 20 நிமிடங்களிலேயே ஒத்தி வைக்கப்பட்டுவிட்டதே... என்ன நடந்தது?

பதில்: நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய கடந்த 11 நாட்களாக எதிர்க்கட்சிகளை பேச விடாமல் சபாநாயகரும் இந்த அரசும் செய்யும் அனைத்து சித்து வேலைகளையும் இந்த உலகம் அறியும். ராகுல் காந்தி மீது அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி, அனுராக் சிங் தாகூர் போன்றோர் பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்து ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொன்னார்கள்.

11 நாட்கள் முடக்கம்

11 நாட்கள் முடக்கம்

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவருடைய கட்சிக்காரர்களே அமளியில் ஈடுபட்டனர். இப்படியே 11 நாட்கள் ஓடிவிட்டன. ராகுல் காந்தி மீது பொய்யான வழக்கு போட்டு அவருடைய எம்பி பதவியை பறித்து அவர் நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் தடுத்தனர். இதுகுறித்தும் அதானி விவகாரம் குறித்தும் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதனால் சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார்.

அடுத்த கட்டம்

அடுத்த கட்டம்

கேள்வி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுலுக்காக காங்கிரஸ் நடத்தி வரும் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?

பதில்: இந்தியாவில் 370 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். காந்தி சமாதி அருகே பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் தலைமையில் நடந்த சத்யாகிரக போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். ராகுல் காந்தின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்காமல் இருப்பதற்கு மோடியும் அமித்ஷாவும் செய்த மாபெரும் சதிதான் இந்த பதவி பறிப்பு.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

அதானிக்காக ஒரு பெரிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அடகு வைக்கின்ற நிலைக்கு தள்ளிவிட்டார்கள். இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அதானி விவகாரத்தால் முழுவதுமாக நடக்க முடியாமல் போய்விட்டது. ராகுல் காந்தி பிப்ரவரி 7 ஆம் தேதி அதானி ஊழல் குறித்து பேசினாரோ அதற்கு முன்னதாக ராகுல் காந்தியை பேச விடாமல் சதி செய்தனர். ஒரு நாளும் அவரை பேசவிடவில்லை. அவருடைய பதவி பறிப்பு என்பது மிகப் பெரிய ஜனநாயக படுகொலையாகும். மோடியும் அமித்ஷாவும் அதானியும் ராகுல் காந்தியை கண்டு பயப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

ராகுல் காந்தி விவகாரம்

ராகுல் காந்தி விவகாரம்

கேள்வி: ராகுல் காந்தி விவகாரம் குறித்து இதுவரை உச்சநீதிமன்றத்திற்கு போகாமல் இருக்க காரணம் என்ன? பொது நல வழக்குதான் போயிருக்கிறது, காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுக்கவில்லை.

பதில்: ராகுல் காந்திக்கு கீழமை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, ப சிதம்பரம், மணீஷ் திவாரி உள்ளிட்டோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த வழக்கறிஞர்கள் கொண்ட குழுவால் இந்த வழக்கை அணுகி கொண்டிருக்கிறோம். 30 நாட்களுக்குள் இந்த வழக்கில் நலல்தொகு தீர்வு வரும் என எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

ராகுல் காந்திக்கு தீர்ப்பு

ராகுல் காந்திக்கு தீர்ப்பு

கேள்வி: மார்ச் 23 ஆம் தேதி சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தது. அன்றைய தினமே பல வழக்கறிஞர்கள் ராகுல் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பிருக்கிறது என கூறியிருந்தனர். ஆனால் அடுத்த நாளே தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யும் வரை ஏன் நீதிமன்றத்தை அணுகவில்லை?

பதில்: கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சு குறித்த மான நஷ்ட வழக்கை குஜராத்தில் உள்ள ஒரு நீதிமன்றம் எப்படி விசாரிக்கலாம் என்ற டெக்னிக்கல் பாயிண்ட் உள்ளது. வழக்கறிஞர் குழு தீவிரமாக ஆராய்ந்து முடிவு எடுக்கும்.

4 ஆண்டுகள்

4 ஆண்டுகள்

கேள்வி: இந்த வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கை போட்ட பூர்னேஷ் மோடி 2022 மார்ச்சில் வழக்கை விசாரிக்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கினார். அவரே கடந்த மாதம் போய் அந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கேட்கிறார். அதானி விவகாரம் குறித்து ராகுல் பேசியதால்தான் இந்த விஷயங்கள் நடந்ததாக கூறுகிறீர்கள். இத்தனை விஷயம் நடக்கும் போது காங்கிரஸ் கட்சி என்ன செய்தது? ராகுல் காந்தியை வெளியேற்ற ஒரு முயற்சி நடந்த போது அது நடக்கும் வரை காங்கிரஸ் என்ன செய்தது?

பதில்: சட்டபடியாக நாம் பார்க்க வேண்டும். இந்த அரசு அதானிக்காக எதையும் செய்யும். மார்ச் 23 ஆம் தேதி அந்த வழக்கின் தீர்ப்பு வருகிறது. இரண்டு வாய்தாக்களில் இந்த தீர்ப்பை எடுக்கிறார்கள். தீர்ப்பு வந்தபிறகுதானே அதற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்க முடியும். இப்போது அதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பு வந்ததும் சபாநாயகரும் பிரதமர் மோடியும் சந்தித்தார்கள். 24 மணி நேரத்தில் இவர்கள் கூடி பதவி பறிப்பை ஏன் செய்தார்கள் என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது. தனது நண்பர் அதானிக்காக பிரதமர் மோடி எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு எடுத்துக்காட்டு ராகுல் காந்தியின் பதவி பறிப்பு.

போராட்டம்

போராட்டம்

கேள்வி: காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டங்கள் போதுமானதாக இல்லை என்ற ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறதே

பதில்: காங்கிரஸ் கட்சி நிறைய இடங்களில் போராட்டத்தை நடத்தி வருகிறது. சரியாக கவனிக்காதவர்கள் வேண்டுமானால் அப்படி சொல்லிக் கொள்ளலாம். இதற்கு மேல் எந்த மாதிரியான போராட்டங்களை நடத்த வேண்டும் என சொல்கிறீர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வந்ததை அடுத்து பேருந்து எரிக்கப்பட்டு 3 மாணவிகள் தீயில் கருகி எரிக்கப்பட்டனர். ஒரு தீர்ப்பு வந்தால் மற்ற கட்சிகளை போல் பஸ் எரிப்பு, ரயில் எரிப்பு போராட்டங்களை காங்கிரஸ் கட்சி செய்யாது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

கேள்வி: ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு காங்கிரஸ்காரர்கள் சிலரே மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லப்படுகிறதே?

பதில்: அனுராக் சிங் தாகூர்தான் அப்படி சொன்னார், அவர் காங்கிரஸ்காரர் இல்லை, பாஜககாரர். பொய்யையும் வன்முறையையும் பரப்பும் கட்சி பாஜக. காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளை போல அராஜக அரசியலையோ வன்முறை அரசியலையோ செய்யாது.

எதிர்க்கட்சிகள்

கேள்வி: காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சியை ஒன்று சேர்க்க இயலுமா? ராகுலுக்கு ஆதரவான போராட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் இணைந்துள்ளது.

பதில்: இதுநாள் வரை எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்காத கட்சி காங்கிரஸ் என சொல்லிக் கொண்டிருந்தார்கள். இத்தனை நாள்கள் அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போராடிக் கொண்டிருந்த போது , திரிணமூல் காங்கிரஸ் மட்டும் வெளியே நின்று போராடும். ஆனால் அத்தகைய கட்சி இன்றைய தினம் எங்களுடன் இணைந்து போராடியது இது வரவேற்கத்தக்க விஷயம் என்றார் மாணிக்கம் தாகூர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+