மணிப்பூர் வன்முறை.. குடியரசு தலைவரை சந்தித்த திமுக எம்பி கனிமொழி உள்பட "இந்தியா" எம்பிக்கள்
டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் எம்பிக்கள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினர்.
மணிப்பூரில் குகி, மைத்தேயி ஆகிய சமூகத்தினருக்கு இடையே வன்முறை நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் இந்த வன்முறை நீடித்து வருகிறது. இந்த நிலையில் மே 4 ஆம் தேதி எடுக்கப்பட்டதாக ஒரு வீடியோவில் இரு பெண்களை நிர்வாணமாக இழுத்து வரும் கலவரக்காரர்கள் அவர்களை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் இரண்டரை மாதங்களாக எந்த நடவடிக்கையையும் மத்திய மாநில அரசுகள் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழலில் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 29 ஆம்தேதி முதல் தொடங்கியது. சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து அன்றைய தினம் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி 30 வினாடிகள் பேசியிருந்தார்.
அதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என தினந்தோறும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து பிரதமர் பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி விவாதம் நடைபெறுகிறது. இதனிடையே இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எம்பிக்கள் மணிப்பூரை நேரில் சென்று ஆய்வு செய்ய முடிவு செய்து 21 பேர் கொண்ட குழுவினர் இரு நாட்கள் மணிப்பூர் சென்றனர். அங்கு நிலவும் சூழலை நேரடியாக ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் அனுமதி கேட்டனர். அதன்படி இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் முர்முவை அவர்கள் சந்தித்தனர். அப்போது மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். திமுக சார்பில் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ ராசா உள்ளிட்டோர் சென்றிருந்தனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் முர்முவை சந்தித்தனர்.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications