அட.. குழந்தைக்கு பெயர் ‘மன் கி பாத்’! நிகழ்ச்சியின்போதே பிரசவ வலியில் துடித்த பூனம் தேவி.. யார் இவர்
டெல்லி : பிரதமர் மோடியின் மன் கி பாத் 100வது உரையையொட்டி டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பங்கேற்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், அந்தக் குழந்தைக்கு 'மன் கி பாத்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' என்னும் தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மன் கி பாத் உரையில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், சமூக சேவகர்கள், விருது பெற்றவர்கள், சாதனையாளர்கள் குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இதுவரை 99 உரைகள் முடிவடைந்த நிலையில் இன்று மன்கி பாத் நிகழ்ச்சியின் நூறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

மன் கி பாத் 100 : இதற்கிடையே இதனை கொண்டாடும் விதமாக டெல்லியில் தேசிய மாநாடு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடந்தகாலத்தில் மன் கி பாத் உரைகளில் பிரதமர் மோடி பாராட்டிய பெண்களில் 100 பேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டர். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் தொடங்கி வைத்தார்.
மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட 100 பெண்களில் உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்த பூனம் தேவி என்பவரும் ஒருவர்.
பூனம் தேவி : சுய உதவிக்குழு மூலமாக வாழைத்தண்டு நார் மூலம் கைப்பை போன்ற பொருட்களை தயாரித்து கூடுதல் வருமானம் ஈட்டும் பூனம் தேவியை மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். இந்நிலையில் மன்கி பாத் 100வது எபிஸோட் நிகழ்வை கொண்டாடும் வகையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த நிறைமாத கர்ப்பிணியான பூனம் தேவிக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பூனம் தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையை பெற்றெடுத்த பூனம் தேவிக்கு அமைச்சர் அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்தார். பூனம் தேவிக்கு பிறந்த குழந்தைக்கு 'மன் கி பாத்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications