இவ்வளவு தான் தயாரிச்சதே.. தொடர்ந்து 8வது மாதமாக கார் உற்பத்தியை குறைத்த மாருதி சுசுகி
Recommended Video
டெல்லி: நாட்டில் வாகனங்களின் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் வாகன தயாரிப்பு நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தொடந்து 8வது மாதமாக செப்டம்பர் மாதத்தில் வாகன உற்பத்தியை 17.48 சதவீதம் அளவுக்கு குறைத்து உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் கார் உற்பத்தியை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு காட்டிலும் 17.37 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
2018 செப்டம்பரில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 659 என்ற அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்ட மாருதி சுசுகி நிறுவனத்தின் பயணிகள் கார்கள், கடந்த செப்டரில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 264 என்ற அளவுக்கும் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தி சரிவு
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 576 என்ற அளவில் சிறிய ரக கார்களான ஆல்டோ, செலரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலேனோ, வேகன் ஆர், டிசையர் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதே சிறிய ரக கார்களின் உற்பத்தி 98 ஆயிரத்து 337 ஆக குறைந்து உள்ளது.

விடாரா ப்ரீசா- எர்டிகா
அதே போல் பெரிய ரக கார்களான விடாரா ப்ரீசா, எர்டிகா மற்றும் எஸ்- கிராஸ் மாடல் கார்களின் உற்பத்தியும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும் போத 17.05 சதவீதம் குறைந்து உள்ளது.

நடுத்தர கார்கள்
நடுத்தர அளவுடைய சிடன் சியஸ் உள்ளிட்ட கார்களோ கடந்த ஆண்டு செப்டம்பரில் 4 ஆயிரத்து 739 என்ற அளவில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பரில் 2 ஆயிரத்து 350 என்ற அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.

கார் தயாரிப்பு பாதிப்பு
ஒட்டுமொத்தமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் அனைத்து ரக வாகனங்களின் உற்பத்தியும், 17.48 சதவீதம் அளவுக்கு செப்டம்பரில் குறைந்துள்ளது. மாருதி சுசுகி மட்டுமல்ல டாட்டா மோட்டார்ஸ், மகிந்திரா, ஹூண்டாய், டொயோட்டா, ஹோண்டா என அனைத்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார் உற்பத்தியும் கடுமையாக சரிந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications