தீபாவளி பரிசை அறிவித்த மத்திய அரசு! மருத்துவ காப்பீடுக்கு நோ ஜிஎஸ்டி!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 56வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து அப்படியே 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கல்வி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மருத்துவ காப்பீடுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, இந்த துறையில் தனிப்பட்ட மருத்துவ காப்பீடுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. முன்னர் இதற்கு 18% வரை வரி இருந்தது. அதேபோல தெர்மோமீட்டர், மருத்துவ தர ஆக்ஸிஜன், அனைத்து நோயறிதல் கருவிகள் & வினையூக்கிகள், குளுக்கோமீட்டர் & சோதனை கருவிகள், பார்வை திறன் கண்ணாடிகள் போன்றவற்றிற்கு இதற்கு முன்னர் 12% ஜிஎஸ்டி இருந்தது. இந்த முறை 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

மற்ற பொருட்களை பொறுத்தவரை, தேங்காய் எண்ணெய், சோப்புகள், ஷாம்புகள், பற்பசைகள், மேஜைப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், நூடுல்ஸ், பாஸ்தா, உணவுப் பொருட்கள், ரொட்டிகள், சைக்கிள்கள், பல மருந்துகள் மற்றும் மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் ஆகியற்றுக்கு 12 மற்றும் 18 சவிகிதத்திலிருந்து குறைக்கப்பட்டு ஜிஎஸ்டி 5% ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல வெண்ணெய், நெய், சீஸ், பால் பொருட்கள், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட நாப்கீன்கள், மிக்சர், பாத்திரங்கள், குழந்தைகளுக்கு உணவளிக்கும் பாட்டில்கள், டயப்பர்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் அதன் பாகங்கள் ஆகியவற்றுக்கும் 12 மற்றும் 18 சதவிகிதத்திலிருந்து 5% ஆக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படும் என்றும், அது மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications