முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி கூட்டமைப்புக்கு காஷ்மீரில் இருந்து வந்த ஆதரவு.. மெகபூபா முப்தி ட்வீட்
டெல்லி: தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ள முயற்சிக்குக் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆதரவு அளித்துள்ளார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தேசிய அளவில் சமூக நீதி கூட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த சமூக நீதிக் கூட்டமைப்பில் இணையுமாறு அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 37 அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியிருந்தார்.

தேசிய அளவில் கூட்டமைப்பு
அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின், "தனித்தன்மை மிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆனதுமான நமது ஒன்றியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும். இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்.

27% இட ஒதுக்கீடு
சமூகநீதித் தத்துவத்தின் மீதான தனது உறுதிப்பாட்டை திமுக ஒவ்வொரு முறையும் வலிமையாகப் போராடி வந்துள்ளது என்பது, அண்மையில், நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் வழியாக 27% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்ததில் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டப்பட்டுள்ளது.

ஸ்டாலின் அழைப்பு
எனினும் சமூகநீதியை உறுதிசெய்ய இட ஒதுக்கீடு மட்டுமே போதுமானதல்ல. சமூகத்தின் பொதுநீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு நூற்றாண்டுகளாய் எதிர்கொண்ட அடக்குமுறையை உடைத்தெறிய வேண்டுமானால் அத்தகையோருக்கு ஒவ்வொரு படியிலும் சில சிறப்புரிமைகள் தரப்பட வேண்டும். சாதிப் பாகுபாட்டுடன் பாலினப் பாகுபாட்டை ஒழிக்கவும்; மாற்றுத்திறனாளிகள் பொதுநீரோட்டத்தில் இணைந்து போட்டியிடக் கூடிய வகையிலும் நாம் முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும். இதற்கான முன்னெடுப்பில், எங்களுடன் நீங்களும் இணைய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

முழு ஆதரவு
தேசிய அளவில் ஸ்டாலினின் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜகவின் திட்டத்தை முறியடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சிகளுக்கு மக்கள் ஜனநாயகக் கட்சி முழு ஆதரவைத் தருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பாஜகவின் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் செயல்திட்டத்தை முறியடிக்க எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் முதல்வர் ஸ்டாலினின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதற்கு பிடிபி தனது முழு ஆதரவைத் தரும்" என்று ட்வீட் செய்துள்ளார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications