வார்த்தையை விட்ட மார்க் ஜூக்கர்பெர்க்..வரிந்து கட்டிய பாஜக அரசு! தெரியாம சொல்லிட்டாரு..பணிந்த மெட்டா
டெல்லி: கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு ஏற்பட்ட சூழல்களை சமாளிக்க முடியாமல் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் ஆளும் கட்சிகள் தோல்வியை சந்தித்தன, இந்தியாவில் ஆளும் கட்சி தோல்வி அடைந்ததாக மெட்டா உரிமையாளரான மார்க் ஜூக்கர்பெர்க் கூறிய கருத்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது மெட்டா.
உலக அளவில் மிகப் பிரபலமான தொழிலதிபர்களின் ஒருவர் மார்க் ஜூக்கர்பெர்க் கல்லூரியில் படிக்கும் போது அவர் தொடங்கிய பேஸ்புக் இன்று உலக அளவில் மிக பிரபலமான சமூக வலைத்தளமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவின் உரிமையாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களாக மார்க் ஜூக்கர்பெர்க் தொடர்பாக சர்ச்சை வெடித்து இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மார்க் ஜூக்கர்பெர்க்," கடந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருந்தது. இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்றது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆளுங்கட்சி தோல்வியை சந்தித்தது" என்றார்.
இந்தியாவில் ஆளுங்கட்சி தோல்வியடைஞ்சதாக அவர் கூறியது கடும் கண்டனங்களை பெற்றது. பாஜக 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்ததாக மார்க் கூறியதற்கு கடும் கண்டனம் பாஜக தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசி இருந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்," 2024 தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்தனர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி மீது மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தி வெற்றி தந்தனர். ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆட்சியில் இருந்த அரசுகள் தோல்வி அடைந்ததாக மார்க் ஜூக்கர்பெர்க் கூறியது சரியான கருத்து இல்லை. கொரோனா காலத்தில் 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவும், இரண்டு பில்லியன் இலவச தடுப்பூசிகளும் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு சாட்சி" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகற்பெர்க் விவகாரத்தை நாடாளுமன்ற குழு கையில் எடுத்தது இது தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்பதாக மெட்டா கூறியுள்ளது.
"2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின் உலகின் பல நாடுகளிலும் மக்களிடையே அதிருப்தியைப் பெற்ற ஆளும் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் பல, தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற முடியவில்லை என மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டதில் இந்தியா என்பது மட்டும் விதிவிலக்காக அமைந்துவிட்டது. மார்க் ஜூக்கர்பெர்க் எவ்வித உள்நோக்கமின்றி எதேட்சையாகப் பேசி விட்டதாக மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத் தலைவரான ஷிவ்நாத் துக்ரல் கூறியுள்ளார். மார்க் ஜூக்கர்பெர்க் பேச்சு தொடர்பாக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதாக பாஜக எம்பி ஆன நிஷிகாந்த் டுபே தெரிவித்திருக்கிறார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications