Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகாலயா, மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத்தில் நிலநடுக்கம்- இந்தியாவை அச்சுறுத்தும் நில அதிர்வுகள்!

மேகாலயா, மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

மேகாலயா, மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத்தில் நிலநடுக்கம்- இந்தியாவை அச்சுறுத்தும் நில அதிர்வுகள்!

டெல்லி: மேகாலயா, மகாராஷ்டிரா மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. ராஜ்கோட்டில் நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி இருந்தது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இரு நாடுகளையும் உருக்குலைத்துள்ளது. துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000-த்தை தாண்டிவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பெருந்துயரத்தில் சிக்கி உள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவுக்கு சர்வதேசத்தின் உதவிக் கரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 Mild earthquake tremors felt in Meghalaya, Maharashtra

இந்நிலையில் துருக்கி, சிரியாவை தொடர்ந்து உலகின் பல நாடுகளை நிலநடுக்க அதிர்வுகள் அச்சுறுத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருவது பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 4 நாட்களில் இன்று 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட நில அதிர்வுகளின் பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானை தொடர்ந்து பப்புவா நியூ கினியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ரிக்டரில் 6.2 அலகுகள் பதிவாகின. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

முன்னதாக இந்தோனேசியா, ஜப்பான் நாடுகளிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதிரவைத்தது. ஜப்பானின் வடக்கே நெமுரா தீபகற்ப பகுதியில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 அலகுகளாகப் பதிவானது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவானது. அங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. பிரிட்டனின் சில பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Mild earthquake tremors felt in Meghalaya, Maharashtra

இந்நிலையில் இன்று இந்தியாவில் மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேகாலயா மாநிலத்தின் துரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆகவும் மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் அதிரவைத்த நிலநடுக்கமானது3.6 அலகுகளாகவும் பதிவாகின. மேகாலயா மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் இந்த நிலநடுக்கம் பொதுமக்ளை அச்சப்படவைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் மேகாலயா மாநிலத்தில் நில நடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. மேகாலயா மாநிலமானது வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இதனால் வங்கதேச எல்லைப் பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Mild earthquake tremors felt in Gujarat, Meghalaya, Maharashtra

மேகாலயா, மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. ராஜ்கோட்டில் ரிக்டரில் 4.3 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. குஜராத்தின் கட்ச் பிராந்தியம் மிகப் பெரிய நிலநடுக்கப் பேரழிவை 2001-ல் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+