ரஷ்யா-உக்ரைன் மோதல் கூடாது.. அமைதியை விரும்புகிறது இந்தியா.. லோக்சபாவில் உறுதியாக சொன்ன ஜெய்சங்கர்
டெல்லி: உக்ரைனிலிருந்து இந்தியர்களை ஆபரேஷன் கங்கா மூலம் பெரிய அளவில் நாம் வெளியேற்றியதை போல் வேறு எந்த நாடுகளும் வெளியேற்றவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது. ஒரு மாதங்களுக்கு மேல் நீடித்து வரும் இந்த போரால் உக்ரைனில் பணிநிமித்தமாகவும் படிப்பதற்காகவும் ஆராய்ச்சி செய்யவும், சென்றிருந்தவர்கள் இந்த போரால் தவித்தனர்.
உண்ண உணவில்லாமல், தாகத்தை போக்க தண்ணீர் இல்லாமல், பணம் எடுக்க வெளியே செல்ல முடியாமல் பங்கரில் அடைந்து கிடந்தனர். இவர்களை அந்தந்த நாட்டு அரசுகள் மீட்டனர். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரத்து சொட்சம் பேரை ஆபரேஷன் கங்கா மூலம் இந்திய அரசு மீட்டது.

உக்ரைனில் இந்தியர்கள்
உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்டது எப்படி என்பது குறித்து லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கினார். அவர் கூறுகையில் உக்ரைனில் சிக்கியிருந்தவர்களை மீட்பதற்காக ஆபரேஷன் கங்கா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.

சவாலான காரியம்
மிகவும் சவாலான இந்த பணியை பார்த்து மற்ற நாடுகள் பிரமித்தன. மிக பெரிய அளவிலான மீட்கும் பணி இது. நம் நாட்டு குடிமக்களை உக்ரைனிலிருந்து மீட்டெடுத்தது போல் வேறு எந்த நாடுகளும் தங்கள் குடிமக்களை மீட்டெடுக்கவில்லை, உக்ரைனின் அண்டைய நாடுகளுக்கு 4 மத்திய அமைச்சர்கள் செல்லாதிருந்திருந்தால் உக்ரைனில் சிக்கியவர்களை மீட்பதில் இந்தியாவுக்கு தற்போது கிடைத்த ஒத்துழைப்பு கிடைத்திருக்காது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் இந்த மீட்பு குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். இதற்காக அவ்வப்போது ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். 5 மாநில தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் உக்ரைன் விவகாரத்தை திறமையாக கையாண்டார்.

புச்சா நகர்
உக்ரைனின் புச்சா நகரில் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது மிகவும் தீவிரமான விஷயம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்பு ரஷ்யாவை நிறுத்த வேண்டும். இந்தியா எப்போதுமே அமைதியையே விரும்புகிறது. வன்முறையை உடனே முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது.
Recommended Video

பேச்சுவார்த்தை
உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா தரப்பிலிருந்து ஏதாவது உதவி எதிர்பார்த்தால் மகிழ்ச்சியாக செய்யலாம். உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாயம் பூசுவது துரதிருஷ்டவசமானது என்றார்.












Click it and Unblock the Notifications