தரமற்ற சாலை அமைப்பது ஜாமீனில் வர முடியாத குற்றம்.. சிறைக்கு அனுப்ப வேண்டும்.. நிதின் கட்காரி அதிரடி
டெல்லி: நாட்டில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 2030-ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் தரமற்ற சாலை அமைப்பதை ஜாமீனில் வர முடியாத ஒரு குற்றமாக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார். தரமற்ற சாலைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு ஒப்பந்ததாரர்களை பொறுப்பாளர்களாக்கி சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
இந்தியாவில் சாலைகள் தரமற்ற வகையில் அமைக்கப்படுவதால் விபத்துக்கள் அதிகமாக நடப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. தனிநபர்களின் சுயநலத்தால் நேராக வர வேண்டிய சாலைகள் சில இடங்களில் குறைந்ததாகவும், சில இடங்களில் வளைந்தும் செல்கின்றன. அதேபோல் சாலைகள் தரமற்ற வகையில் அமைக்கப்படுவதால், திடீரென பள்ளம் ஏற்பட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மோசமான சாலையால் அதிகப்படியான விபத்துக்கள் நடக்கிறது. திடீரென சாலையில் ஏற்படும் பள்ளத்தை கவனித்து டிரைவர் நிறுத்தும் நிலையில், பின்னால் வரும் வாகன ஓட்டி, அதை கவனிக்காமல் விபத்தில் சிக்குவது நடக்கிறது. பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகளே இந்த விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கிறார்கள். கார்களும், லாரிகளும் மோசமான சாலையில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பல்வேறு பகுதிகளில் விதிமீறல்களுக்கு மனித தவறுகள் காரணம் என்றால், மோசமான சாலைகளும் ஒரு காரணமாக இருக்கிறது.

இந்நிலையில் தரமற்ற சாலை அமைப்பதை ஜாமீனில் வர முடியாத குற்றமாக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் நிதின் கட்காரி, "நமது நாட்டில் அதிகரிக்கும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விரிசவாக பேசினார். அப்போது அவர் கூறும் போது, "நாட்டில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 2030-ம் ஆண்டுக்குள் பாதியாக குறைப்பதே மத்திய அரசின் நோக்கம் ஆகும்.
கடந்த 2023-ம் ஆண்டு மட்டுமே 5 லட்சம் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த ஐந்து லட்சம் விபத்துக்களின் மூலம் 1,72,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இப்படி இறந்தவர்களில் 1,14,000 பேர் 18 முதல் 45 வயது வரையிலானவர்கள் ஆவர். அதாவது 6.4 சதவீதம் இளைஞர்கள் விபத்தில் இறந்துள்ளார்கள். இதில் 10 ஆயிரம் பேர் குழந்தைகள் ஆவர்.
நமது நாட்டில் 2023ம் ஆண்டு இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாததால் விபத்தில் சிக்கி ஏற்பட்ட உயிரிழப்புகள் மட்டும 55 ஆயிரம் ஆகும். இதேபோல் 2023ம் ஆண்டு காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் ஆகும். தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படும் இடங்களாக கருதப்படும் பகுதிகளை சீரமைப்பதற்காக ரூ.40 ஆயிரம் கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது.
பொதுவாகவே தரமற்ற சாலைகளும் விபத்துகளுக்கு ஒரு காரணமாக அமைகிறது. எனவே நமது நாட்டில் இவ்வாறு தரமற்ற சாலை அமைப்பதை ஜாமீனில் வர முடியாத ஒரு குற்றமாக்க வேண்டும். மேலும் தரமற்ற சாலைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு ஒப்பந்ததாரர்கள், சலுகை கொடுப்பவர்கள் மற்றும் என்ஜினியர்களை பொறுப்பாளர்களாக்கி அவர்களை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்.
நாட்டில் நிலவும் கடுமையான டிரைவர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த டிரைவர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓட்டுனர் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மையங்களை அமைப்பதற்கு தொழில் துறையினர் மற்றும் அனைத்து துறையினரும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்" இவ்வாறு நிதின் கட்காரி டெல்லியில் நடந்த விழாவில் பேசினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications