71 புதிய அமைச்சர்கள்! யார் யாருக்கு எந்த துறைகள்? மோடி 3.O கேபினட்டின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது
டெல்லி: இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் இல்லத்தில் புதிய அமைச்சரவையின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் யாருக்கு எந்த துறைகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணி வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை பாஜகவால் பெற முடியாததால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட தனது கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை பாஜக அமைத்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 இடங்கள் உள்ளதால் ஆட்சி அமைக்க மோடி உரிமை கோரினார். இதையடுத்து, ஜனாதிபதி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். தொடர்ந்து நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார்.
மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என 71 பேர் பதவியேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நேற்று மாலை 7.15 மணியளவில் தொடங்கிய பதவியேற்பு விழா இரவு 10 மணி வரை பெற்றது. பதவியேற்பு விழா முடிந்ததும், புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
அதில், புதிய அமைச்சரவை இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டதாக உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்காக எந்த ஒரு வாய்ப்பையும் நாங்கள் விடாமல் பணியாற்றுவோம் என்றும் கூறினார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில்,தான், இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் இல்லத்தில் புதிய அமைச்சரவையின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் யாருக்கு எந்த துறைகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்கள் தங்கள் சொத்து பட்டியலை சமர்பிக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications