2014, 2019 மாதிரி இல்லையே "மோடி 3.0.." பாஜகவினரே எதிர்பார்க்கல.. அமைச்சரவையில் இதை கவனிச்சீங்களா?
டெல்லி: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மொத்தம் 72 பேர் இடம் பெற்றுள்ளனர். கடந்த இரண்டு முறையிலும் அதாவது 2014, 2019-ல் மோடி அமைச்சரவையில் எத்தனை பேர் இடம் பெற்று இருந்தனர் என்ற விவரங்களை பார்க்கலாம்.
நடந்து முடிந்த 18-வது லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. 294 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது. பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மோடி 3-வது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள் உள்பட 72 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். கூட்டணி ஆட்சி என்பதால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தலா இரண்டு எம்பிக்கள் , லோக் ஜனசக்தி கட்சி, ஹிந்துஸ்தானி அவா மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஒரு எம்பிக்கும் கேபினட் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு முறையை போல் அல்லாமல் இந்த முறை மோடியின் கேபினட்டில் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அமைச்சரவையில் 23 கேபினட் அமைச்சர்கள் தனிப்பொறுபுடன் கூடிய இணை அமைச்சர்கள் 10 மற்றும் இணை அமைச்சர்கள் 12 பேர் என மொத்தம் 45 பேர் இடம் பெற்று இருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி தனது அமைச்சரவையில் 24 கேபினட் அமைச்சர்களும் தனிபொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 9 பேர் மற்றும் 24 இணை அமைச்சர்கள் என மொத்தம் 57 பேர் இடம் பெற்றனர்.
கடந்த இரண்டு முறையும் மோடியின் கேபினட்டில் 60 க்கும் கீழ் தான் இருந்தது. ஆனால் இந்த முறை மோடியின் அமைச்சரவையில் மோடி உள்பட 72 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று இருக்கிறார்கள். கடந்த இரு முறையும் மோடி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தினர். ஆனால் இப்போது கூட்டணி ஆட்சி அமைத்து இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இதன் காரணமாகவே மோடி தனது அமைச்சரவையில் இந்த முறை 72 பேர் இடமளித்துள்ளதாக சொல்கிறார்கள். பாஜகவினரே எதிர்பார்க்காத அளவுக்கு கடந்த இருமுறைக்கும் மாறாக 72 பேருடன் கூடிய அமைச்சரவையை அமைத்து இருக்கிறார். விதிகளின் படி 81 பேருக்கு மிகாமல் அமைச்சரவை அமைக்கப்பட வேண்டியது அவசியம். மோடியின் 3.0 வில் இந்த எண்ணிக்கையை தொட வெறும் 9 எண்ணிக்கையே குறைவாக உள்ளது.
முன்னதாக பிரதமர் பதவியேற்பு விழாவில் 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். மேலும் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்படி, பாஜக தேசிய தலைவரான ஜேபி நட்டாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதேபோல் முன்னாள் முதல்வர்கள் சிவ்ராஜ் சிங் சவுகான், குமாரசாமி உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் நாயுடுவும் அமைச்சராக பதவியேற்றார்.
-
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
இப்படி பண்ணா போதும்.. வங்கி கணக்கில் பணம் தேடி வரும்.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம சான்ஸ் -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர்












Click it and Unblock the Notifications